Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்; மைக்கேல் வாகன் கருத்து

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்; மைக்கேல் வாகன் கருத்து

By: Nagaraj Sun, 29 Nov 2020 3:03:38 PM

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்; மைக்கேல் வாகன் கருத்து

இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி முடிந்தது.

இதில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்தியாவின் தோல்வி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளதாவது:

australia,indian cricket team,bowlers,tour ,ஆஸ்திரேலியா, இந்திய கிரிக்கெட் அணி, பந்து வீச்சாளர்கள், சுற்றுப்பயணம்

கடந்த 9 மாதங்களில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய இந்திய அணி சிறந்த முறையில் இல்லை. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய போதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஓரணியாக இந்திய வீரர்களால் திரும்ப முடியவில்லை.

சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி, பந்து வீச்சாளர்கள் 5 பேர், போதிய பேட்டிங் இல்லாதது என பழைய காலத்திலேயே உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் (ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகள்) இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்றே நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :