Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்த ஐந்து முக்கிய வீரர்கள் யார் ?

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்த ஐந்து முக்கிய வீரர்கள் யார் ?

By: Karunakaran Tue, 21 July 2020 7:16:51 PM

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்த ஐந்து முக்கிய வீரர்கள் யார் ?

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100க்கும் குறைவான பந்துகளில் சதம் அடிப்பது என்பது கடினமான ஒரு விஷயம். தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெறும் 75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்த ஐந்து முக்கிய வீரர்கள் குறித்து காண்போம்.

உலக வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அப்ரிடி, 398 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று ஆறு முறை சதம் அடித்துள்ளார். அதில் 4 முறை 75 பந்துகளுக்கும் குறைவான பந்துகளில் சதம் அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் 36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.

odis,75 overs,score hundreds,top five batsmen ,ஒருநாள், 75 ஓவர்கள், சதம் சதம், முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள்

ஸ்ரீலங்காவின் ஓபனர் ஆன ஜெயசூர்யா 100க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 14 முறை சதம் அடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சனத் ஜெயசூர்யா ஐந்து சதங்களை 75-ற்கும் குறைவான பந்துகளில் அடித்துள்ளார். இந்திய வீரரான சேவாக்ஏழு முறை 75-ற்கும் குறைவான பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பிரபலமான டிவில்லியர்ஸ், அதிவேகமான 50,100,150 ரன்களை அடித்து ஒருநாள் தொடரில் பல சாதனைகள் படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 47 சதங்கள் அடித்துள்ள ஏ.பி டிவில்லியஸ் அதில் 9 சதங்களை 75 பந்துகளுக்குள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

Tags :
|