Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • முதல் ஆட்டத்திலேயே சென்னை அணி பதிலடி கொடுக்குமா? மும்பையுடன் இன்று மோதல்

முதல் ஆட்டத்திலேயே சென்னை அணி பதிலடி கொடுக்குமா? மும்பையுடன் இன்று மோதல்

By: Monisha Sat, 19 Sept 2020 11:28:49 AM

முதல் ஆட்டத்திலேயே சென்னை அணி பதிலடி கொடுக்குமா? மும்பையுடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பல தடைகளை தாண்டி இன்று தொடங்குகிறது. ஒரு நிகழ்ச்சி தொடங்கும்போது ஆரம்பித்திலேயே பட்டைய கிளப்ப வேண்டும் என நிகழ்ச்சியாளர்கள் விரும்புவார்கள். அதுபோலதான் ஐபிஎல் நிர்வாகம் விரும்ப அதற்கு ஏற்ப அமைந்ததுதான் ஐபிஎல் 'எல் கிளாசிகோ'.

‘எல் கிளாசிகோ’ என்றால் என்ன எனப் பார்க்கிறீர்களா?. ஸ்பெயின் நாட்டில் நடக்கும் லா லிகா கால்பந்து லீக்கில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டிதான் எல் கிளாசிகோ. உலகம் முழுவதும் இந்த போட்டிக்கென தனி ரசிகர்கள் பாட்டாளமே உண்டு.

அது போலத்தான் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி. ரசிகர்கள் போட்டி நடக்கும் நேரத்தில் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு ஆட்டத்தை ரசிக்க தொடங்கி விடுவார்கள்.

ipl cricket,chennai super kings,mumbai indians,ms dhoni,rohit sharma ,ஐபிஎல் கிரிக்கெட்,சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ்,டோனி,ரோகித் சர்மா

அபிதாபியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மல்லுக்கட்டுகிறது.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புவது ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் விலகல் சென்னை அணிக்கு சற்று பின்னடைவு என்ற போதிலும் அதிகமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது சாதகமான அம்சமாகும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும். ரெய்னா ஆடும் 3-வது பேட்டிங் வரிசைக்கு அம்பத்தி ராயுடுவை பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது. இங்குள்ள ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் ஜடேஜா, இம்ரான் தாஹிர், பியுஷ் சாவ்லா ஆகியோரின் பவுலிங் முக்கிய பங்கு வகிக்கும்.

ipl cricket,chennai super kings,mumbai indians,ms dhoni,rohit sharma ,ஐபிஎல் கிரிக்கெட்,சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ்,டோனி,ரோகித் சர்மா

4 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் கடைசி நேரத்தில் ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா விலகியது கொஞ்சம் சறுக்கல் தான். ஆனாலும் சாதுர்யமாக பந்து வீசக்கூடிய பும்ரா, டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் உள்ளிட்டோர் பந்து வீச்சில் அணியை தூக்கி நிறுத்தி விடுவார்கள்.

மும்பை அணியின் அசுர பலமே, அவர்களின் பேட்டிங் தான். கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் கடந்த சீசனில் அமர்க்களப்படுத்தினர். இந்த ஆண்டும் அவர்கள் தான் தொடக்க வீரர்களாக அடியெடுத்து வைக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ் அதிரடியில் மிரட்டுவார்கள். இப்படி எல்லா வகையிலும் மும்பை அணி வலுமிக்கதாக திகழ்வதால் சென்னை அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

கடந்த சீசனில் அடைந்த தோல்விகளுக்கு இந்த ஆண்டு வட்டியும், முதலுமாக முதல் ஆட்டத்திலேயே சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags :