Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கபில்தேவ்வின் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கபில்தேவ்வின் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

By: Nagaraj Tue, 04 July 2023 7:35:30 PM

கபில்தேவ்வின் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

புதுடில்லி: கபில்தேவ் சாதனையை முறியடிப்பாரா?... வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரவீந்திர ஜடேஜா முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனை ஒன்றை முறியடிக்க தயார் நிலையில் இருக்கிறார்.

இம்மாதம் வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் ஜூலை 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை டொமினிகாவிலும், 2-வது டெஸ்ட் ஜூலை 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் ஓவல் பார்க் ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது.

தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்டு 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

achievement,kapil dev,breakthrough,west indies,jadeja ,சாதனை, கபில்தேவ், முறியடிப்பாரா, வெஸ்ட் இண்டீஸ், ஜடேஜா

இச்சூழலில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனை ஒன்றை முறியடிக்க தயாராகியிருக்கிறார்.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கபில் தேவ் 43 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் அவரே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஜடேஜா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இதுவரை 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தில் இருக்கிறார். இச்சூழலில் இந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் கபில் தேவை பின்னுக்குத் தள்ளி ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags :