Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வலுவாக நின்று வெளுத்தெடுக்குமா குஜராத் அணி... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

வலுவாக நின்று வெளுத்தெடுக்குமா குஜராத் அணி... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

By: Nagaraj Fri, 31 Mar 2023 11:06:09 AM

வலுவாக நின்று வெளுத்தெடுக்குமா குஜராத் அணி... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அகமதாபாத்: 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொள்கிறது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்த மோதலில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றி ரசிகர்களை ஆச்சரியமடைய செய்தது.

கடந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. முக்கிய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் போனது, அணி வீரர்களின் காயம் உள்ளிட்டவை கடந்த முறை சென்னை அணிக்கு பலவீனமாக அமைந்தது. ஆனால் இம்முறை ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே அசத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக அம்பத்தி ராயடு, ஷிவம் தூபே ஆகியோரும் அவர்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சென்னை அணிக்கு நிச்சயம் வெற்றி காத்திருக்கிறது.

gujarat,titans,blazing,blazing,leading ,குஜராத், டைட்டன்ஸ், அனல் பறக்கும், களமிறங்கும், முன்னிலை

இது தவிர கைல் ஜேமிசனுக்கு மாற்றாக வந்த தன் ஆப்பிரிக்கா வீரர் சிசண்டா மகலா டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர் என பெயர் பெற்றவர். இவரின் பங்களிப்பும் இருந்தால் சென்னை அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கும்.

மறுபக்கம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் முறையே கோப்பையை வென்றுள்ளதால் கூடுதல் உற்சாகத்துடன் களமிறங்கும். சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட், சாய் சுதர்சன், ரஷித்கான், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், விருத்திமான் சஹா என்று குஜராத் அணியில் மேட்ச் வின்னர்கள் அணிவகுத்து வலுவாக, பலமாக நிற்கின்றனர்.
டேவிட் மில்லர் மட்டும் வேறொரு டி20 லீக்கில் பங்கேற்பதால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது.

கடந்த சீசனில் இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியை வீழ்த்திய குஜராத் அணி, இம்முறை உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி பெற வேண்டும் என உத்வேகத்துடன் களமிறங்கும். இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags :
|