Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா?

இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா?

By: Karunakaran Wed, 02 Dec 2020 09:01:37 AM

இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா?

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது.

முதல் இரு ஆட்டங்களை பொறுத்தவரை இந்திய அணி 300 ரன்களை கடந்து பேட்டிங்கில் ஓரளவு நன்றாகத் தான் செயல்பட்டது. ஆனால் பந்து வீச்சு படுமோசமாக அமைந்தது. கான்பெர்ரா மைதானமும் பேட்டிங்குக்கு உகந்தது தான். அதனால் பவுலர்கள் சரியான அளவில் பந்து வீசி நெருக்கடி கொடுக்க வேண்டியது அவசியமாகும். முகமது ஷமி, பும்ரா, நவ்தீப் சைனி ஆகியோரில் இருவருக்கு ஓய்வு அளித்து விட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் டி.நடராஜன், ஷர்துல் தாகூர் இடம் பெறலாம்.

indian team,consolation,india,australia series ,இந்திய அணி, ஆறுதல், இந்தியா, ஆஸ்திரேலியா தொடர்

இன்னும் 23 ரன்கள் எடுத்தால் 12 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க காத்திருக்கும் கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஒருசேர பேட்டிங்கில் ஜொலித்தால், எதிரணிக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் வெற்றியை பெறலாம். ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக குறுகிய வடிவிலான போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா அல்லது டி.நடராஜன், நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், மேத்யூ வேட் அல்லது டார்சி ஷார்ட், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், மோசஸ் ஹென்ரிக்ஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, சீன் அப்போட், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

Tags :
|