Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்... இன்று இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதல்

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்... இன்று இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதல்

By: Nagaraj Wed, 15 Feb 2023 08:57:53 AM

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்... இன்று இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதல்

கேப்டவுன்: பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று கேப்டவுனில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

indian team,bowling,likely to see,run,win ,இந்திய அணி, பந்து வீச்சு, காண வாய்ப்புள்ளது, ரன், வெற்றி

இதில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 150 ரன் இலக்கை ஒரு ஓவர் மீதம் வைத்து இந்திய அணி எட்டியது. ஷபாலி வர்மா (33 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (53 ரன்கள்), ரிச்சா கோஷ் (31 ரன்கள்) கணிசமாக ரன் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர்.

ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சு எதிர்பார்த்த மாதிரி சிறப்பாக அமையவில்லை. காயத்தால் முதல் ஆட்டத்தில் ஆடாத இந்திய அணியின் துணை கேப்டன் மந்தனா இன்றைய மோதலில் களம் காண வாய்ப்புள்ளது.

Tags :
|