Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தற்போதைக்கு டென்னிஸ் விளையாட மாட்டேன்... வீனஸ் வில்லியம்ஸ் உறுதி

தற்போதைக்கு டென்னிஸ் விளையாட மாட்டேன்... வீனஸ் வில்லியம்ஸ் உறுதி

By: Nagaraj Thu, 09 Feb 2023 08:55:47 AM

தற்போதைக்கு டென்னிஸ் விளையாட மாட்டேன்... வீனஸ் வில்லியம்ஸ் உறுதி

நியூயார்க்: நான் திரும்பி வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். ஓடுவதற்கு முன்னால் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இப்போதைக்கு நான் டென்னிஸ் விளையாட மாட்டேன் என்று போட்டிகளில் பங்கேற்பது குறித்து வீனஸ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸுக்கு தற்போது 42 வயதாகிறது. கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் வைல்டு கார்டு வாய்ப்பை பெற்று விளையாடியபோதிலும் அதற்கு முன் ஆக்லாந்து போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து வீனஸ் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இருப்பினும் வைல்ட் கார்டு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் அவர் தனது காயம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது:- உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் காயத்தால் நான் மிகவும் அவதிப்பட்டேன். இப்போது எனக்கு நீண்டகால காயம் உள்ளது. என்னால் இதிலிருந்து இப்போது மீள முடியாது.

australian open,injury,venus williams,youtube , ஆஸ்திரேலிய ஓபன், காயம், யூ-டியூப், வீனஸ் வில்லியம்ஸ்

சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, நான் எனது மருத்துவர்களுடன் சந்திப்புகளை அமைக்க ஆரம்பித்தேன். மேலும் எனக்கு அடுத்தது என்ன என்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினேன். நான் திரும்பி வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். ஓடுவதற்கு முன்னால் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

நான் கூடிய விரைவில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவேன். ஆனால், இப்போதைக்கு நான் டென்னிஸ் விளையாட மாட்டேன் என்று யூ-டியூப் சேனலில் தெரிவித்துள்ளார். 5 முறை விம்பிள்டன் ஓபனிலும், 2 முறை யு.எஸ். ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் வீனஸ் வில்லியம்ஸ். மகளிர் ஒற்றையர் பிரிவில் சர்வதேச தரவரிசையில் அவர் 664ஆவது இடத்தில் உள்ளார்.

Tags :
|