Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூப்பர் ஓவரை வீசிய யார்க்கர் புகழ் பும்ரா முதன்முறையாக தோல்வி

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூப்பர் ஓவரை வீசிய யார்க்கர் புகழ் பும்ரா முதன்முறையாக தோல்வி

By: Karunakaran Tue, 29 Sept 2020 5:26:18 PM

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூப்பர் ஓவரை வீசிய யார்க்கர் புகழ் பும்ரா முதன்முறையாக தோல்வி

13-வது ஐபில் போட்டியில் ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 201 ரன்கள் சேர்த்தது. பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியனஸ் களம் இங்கியது. இஷான் கிஷன் 99 ரன்களும், கீரன் பொல்லார்டு 60 ரன்களும் விளாச மும்பை வெற்றியை நோக்கி சென்றது. இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் 201 ரன்களே அடித்ததால் போட்டி டையில் முடிந்தது.

சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 7 ரன்கள் அடித்தது, பின்னர் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. பும்ரா அந்த ஓவரை வீசினார். முதல் மூன்று பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 3-வது பந்தை டி வில்லியர்ஸ் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் ஒரு ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் விராட் கோலி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

yorker fame bumra,super over,mumbai indians,bowling ,யார்க்கர் புகழ் பும்ரா, சூப்பர் ஓவர், மும்பை இந்தியன்ஸ், பந்துவீச்சு

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆன பும்ரா இதுவரை மூன்று முறை சூப்பர் ஓவரில் பந்து வீசி உள்ளார். இதில் நேற்று மற்றுமே தோல்வியை சந்தித்துள்ளார். 2017-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கெதிராக மும்பை சூப்பர் ஓவரை சந்தித்தது. 11 ரன்னுக்குள் கட்டுப்பத்தினால் வெற்றி என்ற நிலையில் 6 பந்தில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அப்போது அணியில் மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச் இருந்தும் கூட ஒன்றும் செய்ய இயலவில்லை. அதன்பின், 2019-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக முதலில் பந்து வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் மும்பை 3 பந்திலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. தற்போது 7 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடியாத நிலை பும்ராவிற்கு ஏற்பட்டு விட்டது,

Tags :