Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அனைத்து தரப்பு வாழ்த்துகளாலும், பரிசுகளாலும் உங்களை அசைத்து விட முடியாது - டோனி மனைவி

அனைத்து தரப்பு வாழ்த்துகளாலும், பரிசுகளாலும் உங்களை அசைத்து விட முடியாது - டோனி மனைவி

By: Karunakaran Wed, 08 July 2020 11:30:30 AM

அனைத்து தரப்பு வாழ்த்துகளாலும், பரிசுகளாலும் உங்களை அசைத்து விட முடியாது - டோனி மனைவி

20 ஓவர் உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை என மூன்றையும் வென்றுத்தந்த ஒரே இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோனி ஆவார். கேப்டன்ஷிப்பில் இருந்து விலகிய பின் ஒரு வீரராக தொடர்ந்து விளையாடுகிறார். இருப்பினும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின், எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. இதனால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியுமா? என கேள்வி எழுந்து வருகிறது.

இந்நிலையில் டோனி நேற்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடினார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் எளிமையாக இந்த பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சக, முன்னாள் வீரர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

m.s.dhoni,shakshi,cricket,birthday ,எம்.எஸ்.தோனி, சாக்ஷி, கிரிக்கெட், பிறந்த நாள்

டோனி உடல் ஆரோக்கியத்துடன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும் என சச்சினும், இந்திய கேப்டன் கோலியும் வாழ்த்து கூறினர். மேலும் டோனியை இளம் வீரர், அதிரடி ஜாம்பவான் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வர்ணித்து வாழ்த்து கூறினார்.

இந்நிலையில் டோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மேலும் ஓராண்டு உங்களுக்கு வயதாகி விட்டது. முடி இன்னும் கொஞ்சம் நரைத்து விட்டது. ஆனால் அழகாகவும், இனிமையானவராகவும் மாறிவிட்டீர்கள். அனைத்து தரப்பு வாழ்த்துகளாலும், பரிசுகளாலும் உங்களை அசைத்து விட முடியாது. மெழுகுவர்த்தி பற்ற வைத்து, கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுவோம். வாழ்த்துகள் கணவா!!! என்று பதிவிட்டு தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Tags :