Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டை பாராட்டிய யுவராஜ்சிங்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டை பாராட்டிய யுவராஜ்சிங்

By: Karunakaran Thu, 30 July 2020 7:33:36 PM

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டை பாராட்டிய யுவராஜ்சிங்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 7-வது பவுலர் என்ற பெருமையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டு பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டை பாராட்டியுள்ளார். இதுகுறித்து யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்டூவர்ட் பிராட் பற்றி நான் எப்போது எழுதினாலும் நான் அவரது ஒரே ஓவரில் 6 சிக்சர் (2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில்) விளாசிய சாதனையை மக்கள் நினைவூட்டுவார்கள் என்பதை அறிவேன் என்று பதிவிட்டுள்ளார்.

yuvraj singh,england fast bowler,stuart broad,indian cricketer ,யுவராஜ் சிங், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர், ஸ்டூவர்ட் பிராட், இந்திய கிரிக்கெட் வீரர்

மேலும் யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்டூவர்ட் பிராட்டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதை என்னுடைய ரசிகர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர், 500 விக்கெட் என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், உறுதிமிக்க போராட்டமும் அவசியம். பிராட், நீங்கள் ஒரு ஜாம்பவான். வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Tags :