Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி

3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி

By: Karunakaran Wed, 04 Nov 2020 09:15:36 AM

3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி

ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் எடுத்தார். இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது.

zimbabwe,pakistan,super over,3rd odi ,ஜிம்பாப்வே, பாகிஸ்தான், சூப்பர் ஓவர், 3 வது ஒருநாள்

இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் ஹக் 4 ரன்னிலும், பக்ர் சமான் 2 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் இறங்கிய வஹாப் ரியாஸ் அரை சதமடித்து, 52 ரன்னில் அவுட்டானார். இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனானது. ஜிம்பாப்வே சார்பில் பிளெசிங் முசாராபானி 5 விக்கெட் வீழ்த்தினார்.

இறுதியில் வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்த ஆறுதல் வெற்றி மூலம் 1-2 என தொடரை நிறைவு செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருது ஜிம்பாப்வே வீரர் பிளெசிங் முசாராபானிக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு அளிக்கப்பட்டது.

Tags :