Advertisement

தமிழ்நாட்டில் உள்ள 7 முக்கிய கடற்கரைகள்!

By: Monisha Sat, 24 Oct 2020 2:36:02 PM

தமிழ்நாட்டில் உள்ள 7 முக்கிய கடற்கரைகள்!

நம்முடைய விடுமுறையை சந்தோஷமாக கழிப்பதற்காக தேர்ந்தெடுக்கும் ஒரு முக்கிய இடம் கடற்கரை. பல இயற்கை சூழல்கள் கலந்த நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள 7 முக்கிய கடற்கரைகளை பற்றி தெரிந்து கொள்வோம்!

மெரினா கடற்கரை
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கிலோ மீட்டர் ஆகும்.தமிழக கடற்கரைகளிலேயே எல்லா நாள்களிலும் அதிக அளவு மக்கள் கூடம் கடற்கரையான மெரினா கடற்கரை உள்ளது. இதன் அருகில் அண்ணா நினைவிடம், எம்,ஜி,ஆர் நினைவிடம், ஜெயலலிதா நினைவிடம் உள்ளது.

வேளாங்கண்ணி கடற்கரை
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி கடற்கரை உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் ஒரு அழகான கடற்கரை. கிறிஸ்தவர்களின் புனித வழிபாடு தலமான வேளாங்கண்ணி ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளது. தினமும் ஆலயத்திற்கு வருபவர்கள் மட்டுமல்லாது பலரும் இந்த கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். இந்த கடற்கரை குளிப்பதற்கு உகந்தது எனினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

holidays,tourism,nature,beach,happiness ,விடுமுறை,சுற்றுலா,இயற்கை,கடற்கரை,சந்தோஷம்

கன்னியாகுமரி கடற்கரை
இந்தியாவின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரியில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. உள்ளூர் மட்டுமல்லாது உலகிலுள்ள பல வெளிநாட்டு பயணிகளும் வந்து செல்லும் கடற்கரை இது. இங்கு வங்காள விரிகுடா,அரபிக்கடல்,இந்திய பெருங்கடல் இணையும் முக்கடல் சங்கமம் உள்ளது. கடலுக்குள் பாறையில் அமைந்திருக்கும் விவேகானந்தர் சிலை,133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை மிகவும் புகழ்பெற்றவை. இங்கு சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் காண தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர்.

இராமேஸ்வரம் கடற்கரை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் கடற்கரை இந்துக்களின் புனித நீராடலில் முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கடற்கரையை ஒட்டியுள்ள ராமநாதர் கோவிலின் உள்ளே உள்ள 21 தீர்த்தங்கள் இவ்விடத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். இங்கு கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் ஆழமில்லாமல் இருப்பதால் மக்கள் குளிப்பதற்கும் நீந்துவதற்கும் பொழுதுபோக்குவதற்கும் மிக அருமையாக உள்ளது.

holidays,tourism,nature,beach,happiness ,விடுமுறை,சுற்றுலா,இயற்கை,கடற்கரை,சந்தோஷம்

மாமல்லபுரம் கடற்கரை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் கடற்கரை மிகசிறந்த சுற்றுலாத்தலம் ஆகும். உலக புகழ் பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக்கோவில் இங்கு காணப்படுகிறது. இது மகாபலிபுரம் எனவும் அழைக்கப்படுகிறது. அதிசயிக்கவைக்கும் எண்ணற்ற சிற்பங்களும்.குகைக்கோவில்களும் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் நாளை இனிமையாக கழிக்க சிறந்த இடம் இது.

பூம்புகார் கடற்கரை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள பூம்புகார் கடற்கரை மிகசிறந்த அழகான சுற்றுலா தலமாகும். இதற்க்கு இன்னுமொரு சிறப்பு காவிரி ஆறு இங்குதான் கடலில் கலக்கிறது. இதனால் காவிரிப்பூம்பட்டினம், புகார் எனவும் அழைக்கப்படுகிறது. இது பண்டைய சோழ நாட்டின் முக்கிய துறைமுகமாகும்.

தனுஷ்கோடி கடற்கரை
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி கடற்கரை. அண்டை நாடான இலங்கையுடன் வாணிபம் செய்த பழம்பெரும் துறைமுகமாக இது இருந்தது. இங்கு வங்காள விரிகுடாவும் இந்திய பெருங்கடலும் ஒன்று கூடுகின்றன. சுற்றுலாப்பயணிகளை மிகவும் ஈர்க்கும் இந்த கடற்கரையில் கடல் அலையின் சுழல்கள் மிகவும் ஆபத்தானவை. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவடைவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.

Tags :
|
|