Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • இந்த நாடுகளுக்கு சுற்றுலா சென்றால் கண்டிப்பாக இந்த உணவுகளை சுவைக்க மறக்காதீர்கள்!

இந்த நாடுகளுக்கு சுற்றுலா சென்றால் கண்டிப்பாக இந்த உணவுகளை சுவைக்க மறக்காதீர்கள்!

By: Monisha Sat, 07 Nov 2020 6:31:51 PM

இந்த நாடுகளுக்கு சுற்றுலா சென்றால் கண்டிப்பாக இந்த உணவுகளை சுவைக்க மறக்காதீர்கள்!

உணவை தேடி பல நாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அந்த நாடுகளில் உள்ள மிகவும் சுவை மிகுந்த பிரபலமான உணவுகளை சாப்பிடுவதில் இவர்கள் கில்லாடிகள். அப்படி நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்றால் இந்த உணவுகளை சுவைக்க மறக்காதீர்கள்.

ஆஸ்திரேலியா மீட் பை (meat pie)
ஆஸ்திரேலியர்கள் இறைச்சியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இறைச்சியை கொண்டு செய்யப்படும் மீட் பை ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு. இவர்கள் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மீட் பைகளை சாப்பிடுகிறார்கள். பயணங்களின் போதும் உணவகங்களிலும் இவர்கள் விரும்பி சுவைப்பது இதுவே. சூடான அல்லது குளிர்ந்த தக்காளி சாஸுடன் சேர்த்து இதை சாப்பிடுவது அளவில்லா ருசியை கொடுக்கும். நீங்களும் இங்கு சென்றால் இந்த உணவை சுவைத்து பாருங்கள்.

meat pie,apfelstrudel,moules frites,pudim,poutin ,மீட் பை,அபெல்ஸ்ட்ரூடெல்,மவுல்ஸ் ஃப்ரைட்ஸ்,புடிம்,பௌடின்

ஆஸ்திரியா: அபெல்ஸ்ட்ரூடெல் (Apfelstrudel)
இங்கு பிரபலமான இந்த உணவை ஆஸ்திரியர்கள் தங்கள் சாயங்காலம் காபியுடன் இதை சாப்பிடுவதை விரும்புகிறார்கள். வியன்னீஸ் ஆப்பிள் ஸ்ட்ரூடெல் அல்லது அபெல்ஸ்ட்ரூடெல் என அழைக்கப்படும் இது ஆப்பிளின் புளிப்பு சுவையுடன் இனிப்பான மாவு கலந்து பாரம்பரியமாக சுவை மாறாமல் செய்யப்படுகிறது. ஆஸ்திரியா சென்றால் நீங்களும் ஒருமுறை சுவைத்து பாருங்கள்.

பெல்ஜியம்: மவுல்ஸ் ஃப்ரைட்ஸ் Moules Frites
பெல்ஜியத்தின் தேசிய உணவு என்றே இதை சொல்லலாம். அவித்த சிப்பிகளுடன் உருளை கிழங்கு பிரைஸ் சேர்த்து தருகிறார்கள். சிப்பிகள் ஓட்டுடன் இருப்பது சிறப்பு. வேகவைத்த சிப்பியில் சுவையை கூட்ட ஒருவிதமான மசாலாவை சேர்க்கிறார்கள். இதனால் இது மிகவும் அருமையான சுவையை கொண்டிருக்குமாம். பெல்ஜியம் சென்றால் சிப்பியுடன் இந்த உணவையும் சேர்த்து சுவைத்து பாருங்கள்

meat pie,apfelstrudel,moules frites,pudim,poutin ,மீட் பை,அபெல்ஸ்ட்ரூடெல்,மவுல்ஸ் ஃப்ரைட்ஸ்,புடிம்,பௌடின்

பிரேசில்: புடிம் pudim
நம்ம ஊரில் உள்ள புட்டிங் கேக் போல தானோ என நினைக்க வைக்கிறது. அனால் இதை கேக் போல் செய்து நடுவில் ஒரு ஓட்டையும் போடு வைத்திருக்கிறார்கள். அதிக சுவை கொண்ட இதில் கிரீமி சிறப் சுற்றி ஊற்றி வைத்திருப்பது இன்னும் சுவையை அதிகரிக்கிறது. இது மிகவும் மென்மையாக இருக்குமாம். பிரேசிலில் ஒவ்வொரு உணவகம், வீடுகள் மற்றும் கஃபே விலும் நீங்கள் இந்த உணவை காணலாம்.

கனடா பௌடின் poutin
பிரெஞ்ச் ஃப்ரைஸ், கிரேவி, சீஸ் மற்றும் தயிர் இப்படி ஒரு காம்பினேஷனை யார்தான் விரும்ப மாட்டார்கள். அப்படி ஒரு சுவை இந்த சுவையான கலவை அமெரிக்காவில் கிடைத்தாலும் கனடாவில் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்குமாம். சில உணவகங்களில் 100 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன நீங்கள் உங்கள் விருப்பம் போல பார்த்து வாங்கி சாப்பிடுங்க

Tags :
|