Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • சுற்றுலா செல்ல அருமையான இடம் குரங்கு நீர்வீழ்ச்சி

சுற்றுலா செல்ல அருமையான இடம் குரங்கு நீர்வீழ்ச்சி

By: Nagaraj Sun, 24 May 2020 8:39:50 PM

சுற்றுலா செல்ல அருமையான இடம் குரங்கு நீர்வீழ்ச்சி

தொடர்ந்து ஊரடங்கால் மன அழுத்தம், உளைச்சல் போன்றவை நமக்குள் இருக்கும். ஊரடங்கு முடிந்த உடன் சின்னதாக குடும்பத்தினருடன் ஒரு சுற்றுலா செல்லுங்கள். அதுவும் குறைந்த செலவில்.

கோயம்புத்தூரில் இருந்து 70கி.மீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 28கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு இடம்தான் குரங்கு நீர்வீழ்ச்சி.


monkey falls,coimbatore,fantastic location,travel ,குரங்கு நீர்வீழ்ச்சி, கோயம்புத்தூர், அருமையான இடம், சுற்றுலா

சிறப்புகள்

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை மலைப்பகுதியில் பொள்ளாச்சிக்கும், வால்பாறைக்கும் இடையில் ஆழியார் அணைக்கு அருகில் குரங்கு நீர்வீழ்ச்சி (Monkey Falls) அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதே அதிக சுகமாக இருக்கும்.

அருவியிலிருந்து மேலே சென்றால் வால்பாறை, டாப்ஹில்ஸ் கீழே சென்றால் ஆழியார் டேம் என ஒரு நாள் முழுவதும் சுற்றி வரலாம்.
பாரஸ்ட் செக் போஸ்ட் கடந்து சென்றவுடன் சிறிய குரங்கு நீர்வீழ்ச்சி இருக்கிறது. எல்லோரும் இதை பார்த்தவுடன் இங்கேயே சென்று விடுகின்றனர்.

ஆனால், மேலே சிறிது தூரம் சென்றால் இன்னொரு பெரிய குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. அனுமதிக்கப்படும் நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. குரங்குகள் அதிகம் இருக்கும், கவனமாக இருக்கவும். மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யும் காலங்களில் குளிக்க தடை விதிக்கப்படும். ஹாயாக சென்று மன அழுத்தத்தை அருவியின் நீரோட்டத்தில் கரைத்து விட்டு வாருங்கள்.

Tags :