Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • சுற்றுலாவை மகிழ்வுடனும் மன நிம்மதியுடனும் அனுபவிக்க சில முக்கிய குறிப்புகள்!

சுற்றுலாவை மகிழ்வுடனும் மன நிம்மதியுடனும் அனுபவிக்க சில முக்கிய குறிப்புகள்!

By: Monisha Thu, 03 Dec 2020 3:54:37 PM

சுற்றுலாவை மகிழ்வுடனும் மன நிம்மதியுடனும் அனுபவிக்க சில முக்கிய குறிப்புகள்!

சுற்றுலா என்றாலே மகிழ்ச்சி தானாக வந்து விடும். சுற்றுலா சந்தோஷத்தை அளிப்பதோடு, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைத்து, ஒரு நல்ல புத்துணர்ச்சியை மனதிற்கு தரும். இது ஆரோக்கியமாக வாழவும் உதவும். எனினும், ஒரு சரியான இடத்தை தேர்வு செய்தால் மட்டுமே உங்கள் சூழலை நிம்மதியாக ஆக்க முடியும். சரியான சுற்றுலாத்தலத்தை தேர்வு செய்ய சில குறிப்புகள்.

முதலில் நீங்கள் சுற்றுலா செல்ல திட்டமிடும் முன், உங்களுக்கு இருக்கும் நேரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு நாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாதம், என்று எத்தனை நாட்கள் நீங்கள் சுற்றுலாவிற்க்காக ஒதுக்க முடியும் என்று திட்டமிட வேண்டும். இந்த நேரத்திற்கு தகுந்தவாறே உங்கள் அருகாமையில் இருக்கும் இடத்தையோ, அல்லது சற்று தொலைவில் இருக்கும் இடத்தையோ நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இல்லையென்றால், தவறான கணிப்பே உங்களுக்கு மேலும் அழுத்தத்தை உண்டாக்கக் கூடியதாக மாறிவிடக் கூடும்.

உங்கள் பட்ஜெட்டை நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் செல்லும் இடத்திற்கும், எத்தனை நாட்கள் அங்கு செலவிடப் போகின்றீர்கள் என்பதற்கும் ஏற்றவாறு உங்கள் செலவுகளை நீங்கள் திட்டமிட வேண்டும். அப்படி இல்லையென்றால், அதிக செலவுகள் அல்லது பண பற்றாக்குறை போன்ற சூழல் உங்கள் விடுமுறை நேரத்தில் உங்களுக்கு சங்கடமான சூழ் நிலையை உண்டாக்கி விடலாம்.

travel,pleasure,peace of mind,planning,travel ,சுற்றுலா,மகிழ்ச்சி,மனநிம்மதி,திட்டமிடல்,பயணம்

முடிந்த வரை நீங்கள் எவ்வளவு தூரம் உங்கள் வீட்டில் இருந்து விலகி சுற்றுலா செல்ல வேண்டும் என்று திட்டமிட வேண்டும். குறிப்பாக மன நிம்மதிக்காக விடுமுறையில் செல்பவர்கள் தொலைதூர பயணத்தை அதிகம் விரும்புவார்கள். ஆனால், அதற்கு உங்களிடம் இருக்கும் நேரமும், பணமும் ஒரு முக்கிய விடயமாக உள்ளது. அதனால், நீங்கள் அழுத்தம் இல்லாமல், நிம்மதியாக ஒரு விடுமுறையை செலவிட வேண்டும் என்றால், நீங்கள் செல்ல வேண்டிய தூரத்தை நிர்ணயியுங்கள்.

நீங்கள் செல்லும் இடத்தில் இருக்கும் கால நிலையை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்கவேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் அதிக வெப்பம் நிறைந்த பகுதியில் வசிகின்றீர்கள் என்றால், நிச்சயம் ஒரு குளிர்ந்த பிரதேசத்தை விரும்புவீர்கள். மேலும் இது உங்கள் மனதிற்கும் ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்கும். அதே போன்று, நீங்கள் விடுமுறைக்கு செல்லும் காலமும் முக்கியம். அதிக மழை பெய்யும் காலமாக இருந்தால், உங்களால் சென்ற இடத்தில் அதிகம் வெளியே சுற்றி பார்க்க முடியாமல், அறைக்குள்ளே இருந்து விட வேண்டிய சூழல் உண்டாகலாம். இது உங்களுக்கு பயன் தராமல் போகலாம்.

travel,pleasure,peace of mind,planning,travel ,சுற்றுலா,மகிழ்ச்சி,மனநிம்மதி,திட்டமிடல்,பயணம்

நீங்கள் ஒரு நல்ல அமைதியான சூழலை தேர்வு செய்ய வேண்டும். அதாவது, நீங்கள் தேர்வு செய்த சுற்றுலாத்தலம் அமைதியான சூழலில் இருக்க வேண்டும். சுற்றி அதிக வாகன போக்குவரத்தோ, அல்லது மக்கள் நடமாட்டமோ இல்லாமல், அமைதியாக இருந்தால், நீங்கள் பறவைகளின் சத்தம், காற்றின் ஓசை போன்றவற்றை ரம்மியமான சூழலில் இரசித்து மன அமைதியோடு இருக்கலாம்.

நீங்கள் தனியாக விடுமுறைக்கு செல்கின்றீர்களா, அல்லது உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களோடு செல்லப் போகின்றீர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதிக நபர்களுடன் நீங்கள் விடுமுறைக்கு சென்றால், நிச்சயம் உங்களால் அமைதியான சூழலை எதிர் பார்க்க முடியாது. நிம்மதியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்றால், தனியாகவோ, அல்லது உங்கள் மனைவி/கணவன் அல்லது ஒரு நண்பரோடோ செல்வது நல்லது.

நீங்கள் தங்கும் விடுதிக்கும், மன நிம்மதிக்கும் அதிக தொடர்பு உள்ளது. நீங்கள் ஒரு நல்ல அமைதியான இடத்தில் இருக்கும் தங்கும் விடுதியை தேர்வு செய்ய வேண்டும். மேலும் அந்த விடுதி போதிய வசதிகள் உடையதாக இருக்க வேண்டும். மேலும் சுத்தமாகவும், நல்ல சௌகரியமானதாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தும், நீங்கள் நிம்மதியாக உங்கள் நேரத்தை விடுமுறையில் கழிக்க உதவும். மேலும் நீங்கள் விரும்பும் இடத்திற்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். உணவு, உடற்பயிற்சி கூடம், போன்ற வசதிகளும் இருக்க வேண்டும். எனினும், தங்கும் விடுதிக்கு ஆகும் செலவுகளையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

Tags :
|