Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • சுற்றுலா பயணிகளை கவரும் மிக உயரமான 5 நீர்வீழ்ச்சிகள்!!

சுற்றுலா பயணிகளை கவரும் மிக உயரமான 5 நீர்வீழ்ச்சிகள்!!

By: Monisha Fri, 13 Nov 2020 1:06:49 PM

சுற்றுலா பயணிகளை கவரும் மிக உயரமான 5 நீர்வீழ்ச்சிகள்!!

இயற்கையை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் இயற்கை சூழலோடு இருக்கும் அழகான நீர்வீழ்ச்சி கண்கொள்ளா கட்சியாக இருக்கும். ஏராளமான நீர்வீழ்ச்சிகள் நம்மை சுற்றிலும் இருக்கின்றன. இந்த பதிவில் உலகில் உள்ள மிகவும் உயரமான முதல் 5 நீர்வீழ்ச்சிகள் பற்றி பார்ப்போம்.

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
வெனிசுலாவின் பொலிவார் மாகாணத்தின் கனாய்மா தேசிய பூங்காவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் உயரம் 979 மீட்டர்கள். 1933 ஆம் ஆண்டில் தற்செயலாக அமெரிக்க ஆய்வாளர் ஜிம்மி அதை கண்டுபிடித்தார். இதன் மேற்குப் பகுதி பெரும்பாலும் மேகங்கள் மற்றும் மூடு பனியால் மூடப்பட்டிருக்கும். இது கராவ் ஆற்றின் துணை நதியான சுருன் ஆற்றில் பாய்கிறது. இது ஒரினோகா ஆற்றின் துணை நதியாகும்.

tourism,waterfalls,nature,angel,stream ,சுற்றுலா,நீர்வீழ்ச்சிகள்,இயற்கை,ஏஞ்சல்,நீரோடை

துகேலா நீர்வீழ்ச்சி
948 மீட்டர் உயரமுள்ள இந்த ஐந்து அடுக்கு துகேலா நீர்வீழ்ச்சி தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு நடால் பகுதியில் உள்ள ராயல் நடால் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. மழைக்காலத்தில் மட்டுமே நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்து கொட்டும். ஆண்டின் பிற்பகுதியில் அருவியில் தண்ணீர் விழுவது குறைவாக இருக்கும். இந்த நீர்விழ்ச்சியை நீங்கள் மலையின் உச்சியில் சென்று பார்க்கலாம். அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் இது.

tourism,waterfalls,nature,angel,stream ,சுற்றுலா,நீர்வீழ்ச்சிகள்,இயற்கை,ஏஞ்சல்,நீரோடை

ட்ரெஸ் ஹெர்மனாஸ் நீர்வீழ்ச்சி
ட்ரெஸ் ஹெர்மனாஸ் நீர்வீழ்ச்சி பெருவின் ஜூனினின் ஓடிஷி தேசிய பூங்காவிற்குள் குட்டிவிரேனி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது. இது 914 மீட்டர் உயரம் கொண்டது. இது மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. முதல் இரண்டு அடுக்கு இயற்கையான நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மூன்றாவது அடுக்கு குட்டிவிரேனி ஆற்றில் விழுகிறது. இதைப்பார்க்க கடினம் காரணம். காரணம் இது வெப்பமண்டல மழைக்காடுகளில் உள்ள மிகப்பெரிய உயரமான மரங்களால் சூழப்பட்டுள்ளது. வானிலிருந்து ஓரளவிற்கு பார்க்கலாம்.

tourism,waterfalls,nature,angel,stream ,சுற்றுலா,நீர்வீழ்ச்சிகள்,இயற்கை,ஏஞ்சல்,நீரோடை

ஓலோ உபெனா நீர்வீழ்ச்சி
இது ஒலூபெனா நீர்வீழ்ச்சி எனவும் அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஹவாய் தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது 900 மீட்டர் உயரம் கொண்ட அமெரிக்காவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். சுற்றுலா பயணிகள் படகு அல்லது ஹெலிகாப்டர் மூலமாக இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க முடியும்.

யும்பில்லா நீர்வீழ்ச்சி
யும்பில்லா நீர்வீழ்ச்சி என்பது அமேசானின் வடக்கு பெருவியன் பிராந்தியத்தில் உள்ள கியூஸ்பெஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் பெருவின் புவியியல் நிறுவனம் நடத்திய புவியியல் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த நீர்வீழ்ச்சி 896 மீட்டர் உயரம் கொண்டது. கேவர்னா சான் பிரான்ஸிஸ்கொ என்ற குகையில் இருந்து இந்த நீரோடை வருகிறது.

Tags :
|
|