Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • மூன்று நாட்கள் தொடர் விடுமுறை... கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை... கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை

By: vaithegi Sun, 14 Aug 2022 4:19:44 PM

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை... கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை

கன்னியாகுமரி:கல்வி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலாதலங்களுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை இருப்பதால் சுற்றுலாஇடம் களை கட்டியது.

இந்நிலையில் நேற்று முதல் குமரி மாவட்ட சுற்றுலாதலங்களில் பெருமளவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. மேலும் இன்று கன்னியாகுமரி, பத்மநாபபுரம், திற்பரப்பு, மாத்தூர் தொட்டி பாலம், முட்டம் என அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுபயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

tourist,holiday ,சுற்றுலா பயணி,விடுமுறை

அதே சமயம் கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயம் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். மேலும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை கண்டு களித்தனர். கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் லேசான தண்ணீர் கொட்டி வருகிறது. அதை தொடர்ந்து இன்றும் திற்பரப்புக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் விடுமுறை என்பதால் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்ததால் அவர்கள் வந்த வாகனங்களால் திற்பரப்பில் கடும்போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் போக்கு வரத்தை ஒழுங்கு படுத்த போதிய பணியாட்கள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் கடும்சிரமம் ஏற்பட்டது.

Tags :