Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • சுற்றுலா செல்ல உலகில் உள்ள சிறந்த 5 கடற்கரை நகரங்கள்!

சுற்றுலா செல்ல உலகில் உள்ள சிறந்த 5 கடற்கரை நகரங்கள்!

By: Monisha Fri, 25 Sept 2020 1:32:05 PM

சுற்றுலா செல்ல உலகில் உள்ள சிறந்த 5 கடற்கரை நகரங்கள்!

சுற்றுலா என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் இடம் என்றால் கடற்கரை தான். அதிலும் வெளிநாடுகளுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதாக இருந்தால், அப்போது தேர்ந்தெடுக்கும் நகரங்களில் நிச்சயம் கடற்கரை இருப்பது போன்ற சுற்றுலா நகரங்களைத் தான் தேர்ந்தெடுப்போம். ஏனெனில் கடற்கரை உள்ள நகரங்களில் நேரம் போவதே தெரியாது. மேலும் அங்கு மிகவும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும். அந்த வகையில் உலகில் ஒருசில கடற்கரை நகரங்கள் சிறந்தது என்று பெயர் பெற்றுள்ளது.

மேலும் அந்த நகரங்கள் இரவில் பார்க்கும் போது மிகவும் அழகாகவும், அனைவரையும் கவரும் வகையிலும், அங்கு கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை போன்றவை சிறந்ததாகவும் இருக்கும். எனவே நீங்கள் குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு அதிலும் கடற்கரை நகரங்களுக்கு செல்ல விரும்பினால், அத்தகையவர்களுக்காக உலகில் உள்ள சிறந்த 5 கடற்கரை நகரங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, சுற்றுலாவிற்கு எங்கு செல்லலாம் என்று முடிவெடுங்கள்.

travel,beach,florida,united arab emirates,brazil ,சுற்றுலா,கடற்கரை,ஃப்ளோரிடா,ஐக்கிய அரபு எமிரேட்,பிரேசில்

மியாமி, ஃப்ளோரிடா
உலகிலேயே மியாமி நகரம் தான் கடற்கரை நகரங்களுள் மிகவும் அழகாகவும், கவர்ச்சியானதாகவும் இருக்கும். இது ஒரு சிறந்த சுற்றுலா நகரங்களுள் முக்கியமானதும் கூட.

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்
துபாயில் கடற்கரை மட்டுமின்றி, அழகிய கட்டிடக்கலையும் உடையது. இங்குள்ள கடற்கரையின் முன்பு பல்வேறு அழகான சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. அதில் பூர்ஜ் அல் அராப் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. மேலும் அது ஒரு உருவகச் சின்னமாக உள்ளது.

பார்சிலோனா, ஸ்பெயின்
பார்சிலோனா மத்தியதரைக் கடலின் விளிம்பில் அமைந்துள்ளது. மேலும் இங்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் 2.5 மைல் தூரம் வெள்ளை நிற மணல் உள்ளது. இதுவும் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நகரங்களுள் சிறந்தாக கருதப்படுகிறது.

travel,beach,florida,united arab emirates,brazil ,சுற்றுலா,கடற்கரை,ஃப்ளோரிடா,ஐக்கிய அரபு எமிரேட்,பிரேசில்

ரியோ டி ஜெனிரோ, பிரேசில்
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மிகவும் பிரபலமான ஒரு கடற்கரை நகரங்களுள் ஒன்று. இங்கு வரலாற்று இராணுவக் கோட்டைகள், போர்த்துகீசிய வடிவமுள்ள உல்லாச நடைபாதைகள், உணவகங்கள், அழகான இரவு விடுதிகள் போன்றவை அமைந்து, இந்த நகரத்திற்கு இன்னும் அழகைக் கூட்டுகிறது.

கேப் டவுன், தென்னாப்பிரிக்கா
கடந்த பத்தாண்டு காலமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் சிறந்த கடற்கரை நகரமாக கருதப்படுகிறது. இங்கு ஐரோப்பிய நேர்த்தியுடன் அனைத்தும் அமைந்திருப்பதால், இது ஒரு சிறந்த கடற்கரை நகரமாக உள்ளது.

Tags :
|
|