Advertisement

உலகின் மிகப்பெரிய முதல் 5 ஏரிகள்!

By: Monisha Sun, 01 Nov 2020 4:40:52 PM

உலகின் மிகப்பெரிய முதல் 5 ஏரிகள்!

உலகில் மிகப்பெரிய ஏரிகள் பல உப்பு நீரையும் நன்னீரையும் கொண்டு இருக்கிறது. இந்த பதிவில் அதிக பரப்பளவு கொண்ட உலகின் முதல் 5 ஏரிகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

காஸ்பியன் ஸீ ஏரி (Caspian Sea)
காஸ்பியன் ஸீ ஏரியின் நீர் உப்புநீராக இருப்பதால் கடலென்று சொல்லப்பட்டாலும் இது ஓர் ஏரியாகும். உலகிலேயே மிகப் பெரிய ஏரி இதுவே. இது 3,71,000 சதுர கி.மீ பரப்பளவும் 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. இந்த ஏரியில் அதிக ஆழம் கொண்ட இடம் 3,363 அடி ஆழம் உள்ளது. இது 1,199 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதில் உள்ள நீரானது சுமார் 1.2% உவர்ப்புத் தன்மை கொண்டுள்ளது. இது ஆழ்கடல்களின் உவர்ப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்த ஏரியின் எல்லைகள் ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசக்ஸ்தான் ஆகிய நாடுகள் ஆகும்.

லேக் சுப்பீரியர் (Superior lake)
சுப்பீரியர் ஏரி, வட அமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகளில் மிகப் பெரியது ஆகும். இது 82,100 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. 12,100 கன கி.மீ கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியில் அதிக ஆழம் கொண்ட இடம் 1,333 அடி ஆழம். இந்த ஏரியின் எல்லைகள் கனடா மற்றும் அமெரிக்கா. இது 616 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

caspian,superior lake,victoria lake,huron lake,michigan lake ,காஸ்பியன்,லேக் சுப்பீரியர்,விக்டோரியா ஏரி,ஹுரோன் ஏரி,மிக்சிகன் ஏரி

விக்டோரியா ஏரி (Victoria lake)
விக்டோரியா ஏரி 68,870 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. 2,750 கன கி.மீ கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியில் அதிக ஆழம் கொண்ட இடம் 276 அடி ஆழம். இந்த ஏரியின் எல்லைகள் தன்சானியா, உகாண்டா, கென்யா ஆகும். விக்டோரியா ஏரி தனது 80 சதவீத நீருக்கு மழையையே நம்பியிருக்கிறது. ஒரு வருடத்துக்கு சராசரியாக 2 முதல் 2.2 மீட்டர் அளவுக்கு ஏரி நீர் ஆவியாகிறது.

ஹுரோன் ஏரி (Huron Lake)
ஹுரோன் ஏரி 59,600 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. 3,540 கன கி.மீ கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியில் அதிக ஆழம் கொண்ட இடம் 751 அடி ஆழம். இந்த ஏரியின் எல்லைகள் கனடா மற்றும் அமெரிக்கா. ஹுரோன் ஏரியின் மேற்பரப்பு கடல் மட்டத்திலிருந்து 577 அடி உயரத்தில் உள்ளது.

மிக்சிகன் ஏரி (Michigan Lake)
மிக்சிகன் ஏரி 58,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. 4,900 கன கி.மீ கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியில் அதிக ஆழம் கொண்ட இடம் 922 அடி ஆழம். இந்த ஏரி அமெரிக்காவில் உள்ளது.

Tags :