Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் இரண்டு அதிசய கடற்கரை!

சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் இரண்டு அதிசய கடற்கரை!

By: Monisha Fri, 06 Nov 2020 6:46:29 PM

சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் இரண்டு அதிசய கடற்கரை!

சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் இரண்டு வினோதமான கடற்கரைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இறந்த கடல்
மனிதனால் சாதாரணமாக நீரில் மிதக்க முடியாது என்கிறது அறிவியல். ஆனால் இந்நீரை விட அடர்த்தி குறைவாகவுள்ள எதுவும் சாக்கடல் நீரில் மிதக்கும். அந்த வகையில் இஸ்ரேலில் உள்ள ஒரு விசித்திரமான கடல்தான் 'சாக்கடல்'.

இந்த கடலில் உள்ள உப்பு தன்மையானது மற்ற கடல்களைவிட 8.6 மடங்கு அதிகமாக உள்ளது. ஆகவே இந்த கடல் நீரானது ஒரு லிட்டருக்கு 11/4 கிலோகிராம் அடர்த்தி கொண்டுள்ளதால் மனிதர்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் இந்த கடலில் சாதாரணமாக மிதக்க முடியும்.

இக்கடலில் உப்புத்தன்மைக் காரணமாக மீன்கள் மற்றும் மற்ற கடல்வாழ் உயிரினங்கள் எண்ணிக்கை மிகமிக குறைவாகவே காணப்படுகிறது. மேலும் இந்நீரில் மருத்துவ குணமிக்க கனிமங்கள் அதிக அளவில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

travel,dead sea,hidden beach,mexico,valley ,சுற்றுலா,இறந்த கடல்,மறைக்கப்பட்ட கடற்கரை,மெக்சிகோ,பள்ளத்தாக்கு

மறைக்கப்பட்ட கடற்கரை
மெக்சிகோவில் உள்ள மரியான்டோ ஐலேண்ட் என்னும் தீவில் உள்ளது தான் இந்த அழகிய கிடடேன் பீச். இது உலகிலேயே மிகவும் அழகான கடற்கரைகளில் ஓன்று. இக்கடற்கரையானது இயற்கையாக உருவாகியது இல்லை.

இது உருவானதற்கு பின்னால் ஒரு மோசமான நிகழ்வு உள்ளது. மெக்ஸிகோ அரசு இப்பகுதியில் நடத்திய அணுகுண்டு சோதனையால் ஏற்பட்ட மாபெரும் பள்ளத்தாக்கால் இது அனைவரின் கண்ணைக்கவரும் ஒரு அழகிய கடற்கரையாக மாறியுள்ளது.

தற்போது இங்கு அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் இத்தீவில் உள்ள உயிரினங்கள் அழிந்து வருவதால் மெக்சிகோ அரசாங்கம் இத்தீவில் மீன்பிடிக்க மற்றும் வேட்டையாட முற்றிலுமாக தடை விதித்துள்ளது.

Tags :
|
|