Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவிக்க வேண்டுமா? இங்கே சுற்றுலா செல்லலாம்!

இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவிக்க வேண்டுமா? இங்கே சுற்றுலா செல்லலாம்!

By: Monisha Fri, 04 Dec 2020 09:19:46 AM

இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவிக்க வேண்டுமா? இங்கே சுற்றுலா செல்லலாம்!

கேரளாவின் 12 மாவட்டங்களில் ஒன்று வயநாடு மாவட்டம். இது கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கிடையே அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க எழில் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இயற்கை அமைப்பு காரணமாக இது ஒரு பிரசித்தமான சுற்றுலாப்பிரதேசமாக அறியப்படுகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பிரதேசமானது இயற்கை என்பது இதுதான் என்று பயணிகளுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் கன்னிமை மாறாத எழில் காட்சிகளுடன் அமைதியாக வீற்றிருக்கிறது. எங்கு திரும்பி நோக்கினாலும் கண்களுக்கு அலுக்காத காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் இங்கு தரிசிக்கலாம்.

வெகு தொலைவிலிருந்து கூட சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொரு வருடமும் இந்த வயநாடு பகுதிக்கு வந்து செல்கின்றனர். உங்கள் அன்றாட வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினைகளில் நீங்கள் மூழ்கியிருந்தாலும் சரி, இந்த பகுதிக்கு விஜயம் செய்தால் அவை யாவும் மறைந்து சாந்தமும், நிறைவும் மனதில் நிரம்பியிருப்பதை ஊர் திரும்பும்போது உங்களால் உணரமுடியும்.

nature,tourism,wayanad,emerald,refreshment ,இயற்கை,சுற்றுலா,வயநாடு,மரகதக்கல்,புத்துணர்ச்சி

கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இந்த வயநாடு பகுதியானது மழைக்காலத்தின்போது, வெளியூர் பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்திவிடுகிறது. பேசவும் தோன்றாது மலைப்புடன் சுற்றிப்பார்த்து பரவசமடையும் சுற்றுலாப்பயணிகளில் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும். மரங்களிலும் தாவரங்களிலும் ஒட்டியிருந்த மாசு மழையால் கழுவப்பட்டு, வயநாடு பகுதி ஒரு பிரம்மாண்ட மரகதக்கல் போன்று பிரகாசத்துடன் மழைக்கால முடிவில் ஒளிர்கிறது.

இக்காலத்தில் இங்கு சென்றால் தன்னிலை மறந்து உங்கள் சொந்த கற்பனைகளில் மூழ்கி இயற்கையோடு இயற்கையாக்க ஒன்றிப்போவீர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. தற்காலத்தில் வயநாடு பிரதேசமானது அழகிய இயற்கை காட்சிகளுடனும், வளைந்து நெளிந்து காணப்படும் பச்சை பஞ்சுப்பொதி போன்ற ரம்மியமான மலைகளுடனும், செழுமையான பாரம்பரியத்துடனும் காட்சியளிக்கும் நவநாகரிக இயற்கைப்பூமி எனும் புகழுடன் விளங்குகிறது.

nature,tourism,wayanad,emerald,refreshment ,இயற்கை,சுற்றுலா,வயநாடு,மரகதக்கல்,புத்துணர்ச்சி

காலப்போக்கில் நவநாகரீக நவீன மாற்றங்கள் ஒவ்வொன்றையும் வரவேற்று தன்னுள் இந்த இயற்கைப்பிரதேசம் பொதிந்துகொண்டு விட்டது. இங்குள்ள பல சொகுசு ரிசார்ட் விடுதிகள் பாரம்பரிய ஆயுர்வேத மசாஜ் சிகிச்சைகள் மற்றும் ஆவிக்குளியல் அம்சங்கள் போன்ற வசதிகளுடன் விருந்தினர்களை உபசரிக்கின்றன. உடலையும் மனதையும் சுத்திகரிப்பு செய்யும் இந்த விடுமுறை வாசஸ்தலங்களுக்கு வருகை தரும் பயணிகள் புத்துணர்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவித்த பரவசத்தோடும் ஊர் திரும்புகின்றனர்.

இயற்கையோடு இயைந்த பாரம்பரிய கலாச்சாரத்தையும் நவீன வசதிகளையும் சேர்த்து வழங்கும் இந்த வயநாடு மறக்க முடியாத சுற்றுலா அனுபவத்தை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tags :
|