Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கிருஷ்ண ஜெயந்திக்காக ஆன்லைன் தரிசனத்துக்கு ஏற்பாடு

கிருஷ்ண ஜெயந்திக்காக ஆன்லைன் தரிசனத்துக்கு ஏற்பாடு

By: Nagaraj Sun, 09 Aug 2020 7:40:32 PM

கிருஷ்ண ஜெயந்திக்காக ஆன்லைன் தரிசனத்துக்கு ஏற்பாடு

இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலால் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டங்களை மக்கள் முழுமையாக கொண்டாட முடியாத நிலை. ஆனால் மக்களின் கவலைகளை தீர்ப்பதற்கு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 12-ம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி ஆன்லைன் தரிசனத்துக்கு இஸ்கான் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக, இஸ்கான் அமைப்பின் சென்னை கோயில் தலைவர் சுமித்ரா கிருஷ்ண தாஸ் தெரிவித்துள்ளதாவது:

“அஷ்டமி திதி அன்று கிருஷ்ணரின் பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறோம். இஸ்கான் அமைப்பைப் பொறுத்தவரை சூரிய உதயத்துக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு வரும் பிரம்ம முகூர்த்தத்தில் எந்த தினத்தில் அஷ்டமி திதி வருகிறதோ அன்றைய தினமே (ஆக. 12-ம் தேதி) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடி வருகிறோம்.

online,corona,gokulashtami,celebration ,ஆன்லைன், கொரோனா, கோகுலாஷ்டமி, கொண்டாட்டம்

கிருஷ்ணர் பிறந்த மதுரா பிருந்தாவனத்திலும் வரும் 12-ம்தேதிதான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கால், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியின்போது இஸ்கான் சென்னை கோயில் மூடப்படும். இருப்பினும், இஸ்கான் சென்னை https://www.youtube.com/c/iskconchennai என்ற யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்து அபிஷேகத்தில் பங்கேற்கலாம்.

பல்வேறு போட்டிகள் குறித்த முழுவிவரங்களை http://www.iskconchennai.org என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், வரும் 12-ம் தேதி வரை இஸ்கான் சென்னை 'மெய்நிகர் பிருந்தாவன் யாத்திரையை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் www.studygita.com/yatra மூலம் ஆன்லைனில் காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|