Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத்தை ஒட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பு

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத்தை ஒட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பு

By: vaithegi Sat, 25 Nov 2023 09:16:31 AM

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத்தை ஒட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பு


திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு ... திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத்தை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நிலையில் டிஜிபி தலைமையில் 14,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

கிரிவல பாதையில் 50 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 75 கார் நிறுத்தும் இடங்கள், 14 பேருந்து நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

safety,thiruvannamalai,karthigai maha deepam ,பாதுகாப்பு ,திருவண்ணாமலை,கார்த்திகை மகா தீபம்

இதையடுத்து வெளி மாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் காணாமல் போனால் கண்டறியும் வகையில் பெற்றோருடன் பெயரும் , குழந்தைகளின் கைகளில் 30000 பேண்டுகள் கட்டப்பட உள்ளன.

இதற்கு முன்னதாக மகா தீப திருநாளை ஒட்டி மலை மீது ஏற்றப்படும் தீப கொப்பரைக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனை அடுத்து இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி தற்போது தொடங்கி உள்ளது.

Tags :
|