Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருவண்ணாமலை தீபத்திருவிழாவை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்

By: vaithegi Sat, 25 Nov 2023 09:27:57 AM

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்


திருவண்ணாமலை ;இன்று முதல் வருகிற நவ.27 வரை 10 சிறப்பு ரயில்கள் இயக்கம் ..பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 17-ம் தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று கொண்டு வருகின்றது.

இதையடுத்து நாளை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபமும் ஏற்றபட உள்ளது. இந்த மகா தீப தரிசனத்தை காண 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

special trains,thiruvannamalai,deepatri vizha ,சிறப்பு ரயில்கள்,திருவண்ணாமலை , தீபத்திருவிழா

திருவண்ணாமலை தீபத்திருவிழாவைவொட்டி இன்று முதல் நவ.27 வரை 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வேலூர், திருவாரூர், தாம்பரத்திலிருந்து தி.மலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் நவ.26ல் திருச்சி - வேலூர் இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத்தை ஒட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நாளை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நிலையில் டிஜிபி தலைமையில் 14,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் கிரிவல பாதையில் 50 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 75 கார் நிறுத்தும் இடங்கள், 14 பேருந்து நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

Tags :