Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

By: vaithegi Sun, 26 Nov 2023 3:58:58 PM

சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

சபரிமலை : ஏழை, எளியவர்கள் முதல் அதிகளவிலான நடுத்தர மக்கள் வரை ரயில் பயணங்களையே முதன்மையான இடங்களில் வைத்து உள்ளனர். இதையடுத்து தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் தெற்கு ரயில்வே வாரியம் நாகர்கோவிலிருந்து மகாராஷ்டிராவின் பன்வெல் வரை சிறப்பு கட்டண ரயிலை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி நாகர்கோவில் சந்திப்பிலிருந்து பன்வெல்( 06075) வரை வரும் நவம்பர் 28ஆம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வருகிற டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 16 தேதிகளில் காலை 11:40 மணிக்கு நாகர்கோயில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10:20 மணிக்கு பன்வெல் ரயில் நிலையத்தை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

special train service,sabarimala ,சிறப்பு ரயில் சேவை,சபரிமலை


இதனை அடுத்து மறுமார்கமாக பன்வெல் முதல் நாகர்கோயில் சந்திப்பு வரை நவம்பர் 29ம் தேதி முதல் வரும் அனைத்து புதன்கிழமைகளிலும் வருகிற டிசம்பர் 6, 13, 20, 27, ஜனவரி 3, 10, 17ம் தேதிகளில் பன்வெல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு

அடுத்த வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ரயில்களுக்கான முன்பதிவு பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தெற்கு ரயில்வே வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :