Advertisement

திருவண்ணாமலை கோயிலில் பந்தக்கால் நடும் விழா

By: Nagaraj Tue, 29 Sept 2020 09:14:51 AM

திருவண்ணாமலை கோயிலில் பந்தக்கால் நடும் விழா

கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக அண்ணாமலையார் கோயிலில் நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.17ல் தொடங்குகிறது. தங்கக் கொடி மரத்தில் நவ.20-ல் கொடியேற்றமும் நவ.29-ல் மகா தீபமும் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள, அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை பந்தக்கால் நடப்பட்டது. மங்கள இசை ஒலிக்க, சிவாச்சாரியாரிகளின் வேத மந்திரங்கள் முழங்க, ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

bandhakal,karthika lamp,devotees,flag trees ,பந்தக்கால், கார்த்திகை தீபம், பக்தர்கள், கொடி மரங்கள்

அப்போது, அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கொடி மரங்கள், பஞ்ச மூர்த்திகள் மாட வீதியுலா வரும் வாகனங்கள், பஞ்ச ரதங்கள், சர விளக்கு உள்ளிட்ட தீபாராதனை பொருட்கள் ஆகியவை சீரமைப்பு மற்றும் மாட வீதியை செப்பனிடுதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, பந்தக்கால் நடும்போது பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :