Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஆடி மாதம் பிறந்தாச்சு... சூரிய நமஸ்காரம் செய்து பலன்களை அடையுங்கள்

ஆடி மாதம் பிறந்தாச்சு... சூரிய நமஸ்காரம் செய்து பலன்களை அடையுங்கள்

By: Nagaraj Sun, 19 July 2020 7:01:49 PM

ஆடி மாதம் பிறந்தாச்சு... சூரிய நமஸ்காரம் செய்து பலன்களை அடையுங்கள்

ஆடிமாதத்தில் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏராளமான பலன்கள் கிடைக்கிறது என்று ஆன்மீக பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆடி மாதம் பிறந்து விட்டது. இதை தட்சிணாயன புண்ய காலம் என்பார்கள். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்கள் தட்சிணாயன புண்ய காலம் என்கிறது வேதம். அதேபோல், மார்கழி மாதத்தின் கடைசி நாள் வரைக்கும் தட்சிணாயன புண்ய காலம். இதையடுத்து தை மாதம் பிறக்கும். தை மாதப் பிறப்பு, உத்ராயன புண்ய காலம் என்று அழைக்கப்படும்.

இந்த உத்ராயன புண்ய காலம், தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் உத்ராயன புண்ய காலம் என்று அழைக்கப்படுகிறது.

sunrise,adimath,namaskar,planetary defects,departure ,சூரிய உதயம், ஆடிமாதம், நமஸ்காரம், கிரக தோஷங்கள், விலகும்

ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். தை முதல் ஆனி மாதம் வரை, உத்ராயன காலம். தை மாதம் உத்ராயன காலம் தொடங்கும் போது , மகர சங்கராந்தி என்றும் பொங்கல் திருநாள் என்றும் கொண்டாடுகிறோம்.

அந்தநாளில், சூரிய நமஸ்காரம் செய்கிறோம். சூரியனாருக்கு படையலிடுகிறோம். சூரிய பகவானை மனதார வேண்டிக் கொள்கிறோம். ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் வெளியே வெட்டெவெளியில் பொங்கல் வைப்பது கிராம மக்களின் வழக்கம்.

இப்படி வைக்கப்படும் பொங்கல் படையலின் போது சூரியனாரையும் நமஸ்கரிப்பார்கள். ஆடி மாதம் பிறந்து விட்டது. தட்சிணாயன காலம் தொடங்கி விட்டது. ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தட்சிணாயன புண்ய காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை.

காலையில் சூரிய உதயத்தில் எழுந்து, சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். சூரிய நமஸ்காரம் செய்து, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். கிரக தோஷங்கள் அனைத்தையும் விலக்கித் தந்தருள்வார் சூரிய பகவான்.

Tags :