Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • அதர்மத்தை அழிக்க கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி!!!

அதர்மத்தை அழிக்க கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி!!!

By: Nagaraj Fri, 07 Aug 2020 8:56:31 PM

அதர்மத்தை அழிக்க கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி!!!

நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் `கோகுலாஷ்டமி’ என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி’ என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.

அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று,ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.

யசோதையிடம் கிருஷ்ணன் வளர்ந்தான். பால்ய லீலைகளை கோகுலத்தில் நிகழ்த்திக் காட்டினான். கோகுலத்துப் பெண்கள் அவனிடம் அன்பு கொண்டனர். அவனது விளையாட்டுத்தனம் பலரையும் கோபப்பட வைத்தாலும், அவனது மலர்ந்த முகத்தைக் கண்டதும் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. கிருஷ்ணர் வளர்ந்து பெரியவனாகி கம்சனை வதம் செய்து, பாட்டன் உக்கிரசேனனை சிறையில் இருந்து விடுவித்து அரசனாக்கிவிட்டு, பெற்றோர்களான வசுதேவர், தேவகியிடமும், தன்னை வளர்த்த நந்தன், யசோதையிடமும் அன்புடன் இருந்தான்.

butter,gopis,uriyadi festival,milk,krishna ,வெண்ணெய், கோபியர்கள், உறியடி விழா, பால், கிருஷ்ணர்

துன்பங்கள் விலகும்

உலகத்தைப் பீடித்திருந்த துன்பங்கள் விலகி, கண்ணனால் ஒளிபெற்றது. அந்தக் குழந்தை பிறந்த நாள் ஜென்மாஷ்டமி. கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி. தீமையை அழித்து ஒளியூட்டிய நல்ல நாள். எண்ணங்களே காட்சியாகிறது இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை கிருஷ்ணர் காப்பாற்றினார். யமுனை நதிக்கரையில் காலிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார்.

இளவயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.
தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். பின்னர், துவாரகைக்கு மதுராபுரி மக்களுடன் குடிபெயர்ந்தார். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த போரில் தனது சேனையை கவுரவர்களிடம் கொடுத்து விட்டு, தான் ஆயுதம் ஏந்தாமல் அர்ஜூனனின் தேரோட்டியாக கிருஷ்ணர் பணிபுரிந்தார்.

இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது. இதுவே இந்துக்களின் புனித நூலாக உள்ளது. நாம் எதை எண்ணுகிறோமோ அதுவாகவே காட்சி தருபவரே கிருஷ்ணர். பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்தபோது அவருக்கு கிருஷ்ணர் காட்சியளித்தார். முழு ஆயுதபாணியாகக் காட்சி தருகிறார். பீஷ்மர் ஒரு போர் வீரர். அவருக்கு போர் வீரராகவே காட்சியளிக்கிறார்.

butter,gopis,uriyadi festival,milk,krishna ,வெண்ணெய், கோபியர்கள், உறியடி விழா, பால், கிருஷ்ணர்

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தின்பண்டங்களுடன் தயிர் சேர்த்தும், பாலையும் வெண்ணெயையும் கலந்தும் பக்தர்கள் ‘தஹிகலா’ தயாரிப்பதுண்டு.

கிருஷ்ணர் மாடு மேய்க்கும்போது, கோபியர்கள் கொண்டுவரும் சாதங்களையும் கலந்து உண்பார். அதை இன்றும் பின்பற்றும் விதமாக, தஹிகலா தயாரிப்பது, வெண்ணெய் தாழியை உடைப்பது வழக்கத்தில் உள்ளது. இதுவே உறியடி விழாவாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

Tags :
|
|
|