Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வல்லிபுர ஆழ்வார் ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழா கொடியேற்றம்

வல்லிபுர ஆழ்வார் ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழா கொடியேற்றம்

By: Nagaraj Wed, 16 Sept 2020 09:06:45 AM

வல்லிபுர ஆழ்வார் ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழா கொடியேற்றம்

இன்று மஹோற்சவ பெருவிழா கொடியேற்றம்...வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா இன்று புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

இவ்வாலயப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்- 23 ஆம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசன உற்சவமும், 24 ஆம் திகதி வெண்ணைய் உற்சவமும், 25 ஆம் திகதி துகில் திருவிழாவும், 26 ஆம் திகதி பாம்புத் திருவிழாவும், 27 ஆம் திகதி கம்சன் திருவிழாவும் நடக்கிறது.

தொடர்ந்து 28 ஆம் திகதி வேட்டை உற்சவமும், 29 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 30 ஆம் திகதி புதன்கிழமை காலை-09 மணியளவில் தேர்த் திருவிழாவும், அடுத்தமாதம்-1 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை-05 மணியளவில் சமுத்திரத் தீர்த்தோற்சவமும், 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-10 மணியளவில் கேணித் தீர்த்தோற்சவமும், இரவு-7 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறவுள்ளது.

festival,flag hoisting,jaffna,temple ,மஹோற்சவம், கொடியேற்றம், யாழ்ப்பாணம், ஆலயம்

பெருந் திருவிழா நாட்களில் காலை உற்சவம் காலை 8 மணிக்கும் இரவு உற்சவம் மாலை-4.30 மணிக்கும் ஆரம்பமாகும். இதேவேளை, மஹோற்சவப் பெருந் திருவிழாக்களில் கலந்து கொள்ளும் அடியவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்பதுடன் சமூக இடைவெளியையும் பேண வேண்டுமென ஆலய அறங்காவலர் சபையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அங்கப் பிரதட்சணை, காவடி ஆகிய நேர்த்திக் கடன்களுக்கு இம்முறை மஹோற்சவ நாட்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மஹோற்சவ நாட்களில் அன்னதானம் பார்சல் மூலம் இடம் பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|