Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக நிற்கும் பாதாம் பிசின்!!

தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக நிற்கும் பாதாம் பிசின்!!

By: Monisha Wed, 01 July 2020 3:01:22 PM

தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக நிற்கும் பாதாம் பிசின்!!

பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக நின்று உடலில் ஏற்படும் தாது பற்றாக்குறையை போக்குகிறது. அதோடு தோல் வறட்சி மற்றும் வெடிப்புகளை குணமாக்கும். பாதாம் பிசினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

உஷ்ணத்தால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு சிலருக்கு நீர் சுருக்கு, சிறுநீர் அடைப்பு, சிறு நீரக கல் போன்ற வேறு சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் உஷ்ண நோய்கள் தீரும்.

காலதாமத உணவு முறைகளால் உண்டாகும் நெஞ்செரிச்சல், செரிமான கோளாரால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிடலாம்.

skin,bones,health,almond resin,cow milk ,தோல்,எலும்புகள்,ஆரோக்கியம்,பாதாம் பிசின்,பசும்பால்

நீண்ட நாள் நோயால் பாதிக்கபட்டவர்கள் உடலில் சத்து இன்றி மெலிந்து இருப்பார்கள், இவர்கள் வாரத்திற்க்கு மூன்று நாட்கள் பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.

ஆண் மலட்டு தன்மை உடையவர்கள் தினமும் இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து குடித்து வந்தால் நரம்புகள் வலு பெற்று மலட்டு தன்மை நீங்கும். குழந்தை பெற்ற தாய்மார்கள் உடலில் சக்தி இழந்து இருப்பர்கள் இவர்கள் பாதம் பிசின் கலந்த பாலை சாப்பிடுவதால் கருப்பையில் உள்ள நச்சு நீங்கி உடல் வலுவடையும்.

Tags :
|
|
|