Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சுண்டைக்காயில் நிறைந்துள்ள நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம் வாங்க!

சுண்டைக்காயில் நிறைந்துள்ள நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம் வாங்க!

By: Monisha Wed, 10 June 2020 3:32:45 PM

சுண்டைக்காயில் நிறைந்துள்ள நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம் வாங்க!

சுண்டைக்காய் வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துக்களை அதிகம் உள்ளடக்கியது. நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அவசியம். அது சுண்டைக்காய் அதிகளவில் உள்ளது. ஆரஞ்ச், கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு.

சுண்டைக்காய் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. மூலம் காரணமாக ஏற்படுகிற வலி, கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது சுண்டைக்காய்.

காய்ச்சல் இருக்கும்போது சுண்டைக்காயைச் சேர்த்துக் கொண்டால் ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும். உடலில் உண்டாகிற காயங்களையும் புண்களையும் ஆற்றுகின்ற குணமும் சுண்டைக் காய்க்கு உண்டு.

turkey berry,vitamin a,blood white cells,health,benefits ,சுண்டைக்காய்,வைட்டமின் ஏ,ரத்த வெள்ளை அணுக்கள்,ஆரோக்கியம்,நன்மைகள்

ஆஸ்துமா, வறட்டு இருமல், நாள்பட்ட நெஞ்சுச் சளி, போன்ற தொந்தரவுகள் இருக்கிறவர்களுக்கு சுண்டைக்காய் அருமருந்து. ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க இது உதவும்.

தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்கக்கூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.

இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும். சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி தினம் சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்த் தொற்றும், அதன் விளைவாக உண்டாகிற அரிப்பும் குணமாகும்.

Tags :
|