Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஞாபக சக்தியை அதிகரிக்கும் உதவும் 7 உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்!

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உதவும் 7 உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்!

By: Monisha Wed, 15 July 2020 2:58:24 PM

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உதவும் 7 உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்!

சிலர் எந்த வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவார்கள். இவை அனைத்திற்கும் சரியான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் ஒரு காரணம். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். எந்த உணவுகளை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக ஹெர்ரிங், சால்மன், சூரை, கானாங்கெளுத்தி, பொத்தல், நெத்தலி, மற்றும் மத்தி போன்றவை மிகவும் சிறந்தது.

memory,omega-3,fatty acids,polyphenols,vitamin e ,ஞாபக சக்தி,ஒமேகா-3,ஃபேட்டி ஆசிட்,ஃபாலிபீனால்,வைட்டமின் ஈ

பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இந்த பொருட்களை சாப்பிட்டால், மூளைச் செல்கள் நன்கு செயல்படும். முக்கியமாக தயிரில் அமினோ ஆசிட் தைரோசின் என்னும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது.

பெர்ரிப் பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல் உள்ளது. இது அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரிப் பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது.

memory,omega-3,fatty acids,polyphenols,vitamin e ,ஞாபக சக்தி,ஒமேகா-3,ஃபேட்டி ஆசிட்,ஃபாலிபீனால்,வைட்டமின் ஈ

க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும் ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.

கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.

Tags :
|