Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சோம்பு என்று அழைக்கப்படும் பெருஞ்சீரகத்தில் இத்தனை நன்மைகளா?

சோம்பு என்று அழைக்கப்படும் பெருஞ்சீரகத்தில் இத்தனை நன்மைகளா?

By: Monisha Fri, 27 Nov 2020 1:10:51 PM

சோம்பு என்று அழைக்கப்படும் பெருஞ்சீரகத்தில் இத்தனை நன்மைகளா?

இந்தியா முழுவதும் பரவலாக சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் பெருஞ்சீரகம். சிலர் சோம்பை மசாலாவாக பயன்படுத்தி வருகின்றனர். பலர் அதை வாய் நறுமணமூட்டியாக பயன்படுத்துகின்றனர்.

பெருஞ்சீரகம் நமது வாழ்க்கையில் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. வாய்க்கு நறுமணமூட்டி புத்துணர்வு கொடுக்கும். விருந்துக்கு பிறகு சோம்பை வாயில் போட்டு சுவைப்பது, மணத்துக்காக மட்டுமல்ல, செரிமானத்திற்காகவும் தான். நமது வயிற்றை தளர்த்தி, உணவை ஜீரணிக்க உதவுகிறது பெருஞ்சீரகம்.

பெருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் சருமம் புத்துணர்வு பெற்று பிரகாசமாகிறது. சோம்பு ஒரு சிறந்த ரத்த சுத்திகரிப்பான். ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும். சோம்பு சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும். பெருஞ்சீரகம் போட்டு ஆவி பிடித்தால், கண்களின் ஒளி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

fennel,health,aromatherapy,eyes,cough ,பெருஞ்சீரகம்,ஆரோக்கியம்,நறுமணமூட்டி,கண்கள்,இருமல்

உங்கள் வாயிலிருந்து துர்நாற்றம் வந்தால், அரை டீஸ்பூன் சோம்பை ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை மென்று சாப்பிடுங்கள். இது, வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால், பெருஞ்சீரகம் சாப்பிடலாம். வெல்லத்துடன் சேர்த்து சோம்பை சாப்பிடுவதால் ரத்த ஓட்டத்தில் வரும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து போகும்.

பெருஞ்சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீர் போல குடிப்பது அஜீரணத்திற்கு நிவாரணம் அளிக்கிறது. பெருஞ்சீரகத் தேநீர் குடிப்பது இருமலை குணப்படுத்தும். அதோடு, பெருஞ்சீரகத்தை தொடர்ந்து பயன்படுத்தினால் மாரடைப்பு அபாயம் குறையும். தினமும் பெருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் ஆழ்ந்த உறக்கம் வரும்.

Tags :
|
|
|