Advertisement

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா ?

By: Karunakaran Fri, 09 Oct 2020 4:09:07 PM

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா ?

நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் அனைத்து வகையான சத்துகளும் சீராக இருப்பதுபோல அமைத்துக்கொள்வது மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உணவுகளை சமைக்க வேண்டும். முதியவர்களுக்கு அவர்களின் செரிமானம் மற்றும் தேவைப்படும் சத்துகள் உள்ள உணவுகள் தயார் செய்து தர வேண்டும். என்ன வகையான உணவு உணவு சாப்பிட்டாலும், தண்ணீர் குடிப்பது தவிர்க்க முடியாதது.

பலர் ஏசி அறைகளில் வேலைப் பார்ப்பதால் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கின்றனர். எப்போதாவது தோன்றும்போது தண்ணீர் குடிக்கின்றனர். இது சரியான பழக்கம் அல்ல. இயல்பான மனிதர் ஒருவர் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். பலர் வேலை மும்முரத்தில் தண்ணீர் குடிப்பதை மறந்துவிடுகின்றனர். பெண்கள் வெளியில் செல்லும்போது கழிவறை தேடி அலைய முடியாது என தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. சராசரி உடலில் தண்ணீரின் அளவு சீராக இருக்க வேண்டும்.

drink,water,eating,food ,பானம், தண்ணீர், உண்ணுதல், உணவு

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது சரியா என்று தோன்றும். பெரும்பாலான மருத்துவர்கள் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க சொல்கிறார்கள். அப்படிக் குடிக்கும்பட்சத்தில் உணவின் அளவு குறைந்துவிடும். உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் சிலர் அதிகம் சாப்பிட்டு விடக்கூடாது என்பதாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பார்கள். ஆனாலும் இதை ஒரு மருத்துவரின் அறிவுரை கேட்டபிறகே முடிவெடுக்க வேண்டும். தானாக இந்தப் பயிற்சியை மேற்கொள்ள கூடாது.

சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கலாமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டு. உணவை உமிழ்நீரோடு நன்கு மென்று சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் தேவை வராது. அதற்காக விக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அப்படியான நேரங்களில் மிகக் குறைவான அளவு தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பும், சாப்பிட்ட பிறகு அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது. முடிந்தளவு உடலில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் குடிப்பது என்கிற நிலைமைக்கு கொண்டு செல்லாதீர்கள்.

Tags :
|
|
|