Advertisement

தேவையற்ற கெட்ட கொழுப்பினை குறைக்கும் வெந்தயம்!

By: Monisha Sun, 29 Nov 2020 2:10:15 PM

தேவையற்ற கெட்ட கொழுப்பினை குறைக்கும் வெந்தயம்!

சமையலில் பயன்படும் வெந்தயத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. வெந்தயத்தில் வைட்டமின் எ, வைட்டமின் சி, இரும்புசத்து, வைட்டமின் பி-6, மெக்னீசியம், நார்சத்து, புரதம், பொட்டாசியம் போன்ற பலவித சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

வெந்தயத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இது சருமத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறது. வெந்தயத்திற்கு உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பினை குறைக்கும் சக்தி உண்டு.

மேலும் உடலினை குளிரவைக்கும் சக்தி உண்டு. உடல் உஷ்ணம் பிரச்சினை அதிகம் உள்ளவர்கள் சிறிது அளவு வெந்தயத்தினை தினமும் காலை நீரில் ஊறவைத்து வெறும் வயற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடையும்.

bad fat,fiber,protein,dill,health ,கெட்ட கொழுப்பு,நார்சத்து,புரதம்,வெந்தயம்,ஆரோக்கியம்

உடலில் இரும்புச்சத்து குறைபாட்டினால் வரும் நோயே இரத்த சோகை ஆகும். வெந்தயத்தில் அதிக அளவு இரும்புசத்து உள்ளது. தினமும் சிறிதளவு வெந்தயத்தினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை னாய் வராமல் தடுக்கும்.

வெந்தயம் அதிகம் உண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இதனை எடுத்துக் கொள்ளும்போது இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வெந்தயத்தினை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வு தடுக்கப்படும். அதற்கு வெந்தயத்தினை அரைத்து தலை முடிக்கு தடவி ஒரு 30 நிமிடம் கழித்து சிகைக்காய் தேய்த்து குளித்து வந்தால்முடி ஆரோக்கியமாக இருக்கும்.

Tags :
|
|