Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தொடர்ந்து வறட்டு இருமல் காணப்படுகிறதா? உங்களுக்காக எளிய குறிப்புகள்!

தொடர்ந்து வறட்டு இருமல் காணப்படுகிறதா? உங்களுக்காக எளிய குறிப்புகள்!

By: Monisha Fri, 20 Nov 2020 12:41:50 PM

தொடர்ந்து வறட்டு இருமல் காணப்படுகிறதா? உங்களுக்காக எளிய குறிப்புகள்!

கொஞ்சம் காலநிலை மாறினாலும் இருமலும், சளியும் உடனே நம்மை பாடாய்படுத்தும். ஆனால் சளி சரியான பின்னரும் தொடர்ந்து வறட்டு இருமல் காணப்படுகிறதா? உங்களுக்காக சில வீட்டு வைத்திய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இஞ்சி, தேன்

ஒரு டம்ளர் நீரில் ஒரு சிறு துண்டு இஞ்சியை சிறிதாக நறுக்கி போட்டு அந்த நீரை நன்கு கொதிக்க வையுங்கள். பின் அதை வடிகட்டி அந்த நீருடன் தேன் கலந்து தினமும் காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் வறட்டு இருமலுக்கு தீர்வு காணலாம்.

புதினா
புதினாவில் இருக்கும் நற்குணங்கள் வறட்டு இருமலை குணப்படுத்த கூடியதாகும். இதை நீங்கள் சமைக்கும் எந்த உணவுகளில் வேண்டுமானாலும் சேர்த்து உண்ணலாம். தொடர்ந்து இதை பயன்படுத்தும் பொழுது வறட்டு இருமல் வருவதை தடுக்கலாம்.

dry cough,ginger,honey,mint,raisins ,வறட்டு இருமல்,இஞ்சி,தேன்,புதினா,உலர் திராட்சை

மாதுளை
மாதுளம் பழத்தை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் வைட்டமின் சி உள்ளது. மாதுளையை உதிர்த்து அதனுடன் தேன் மற்றும் இஞ்சி சாற்றை கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமலை குணப்படுத்தலாம்.

உலர் திராட்சை

50 கிராம் உலர் திராட்சை மற்றும் 50 கிராம் வெல்லம் இரண்டையும் சேர்த்து நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் இந்த கலவையை தினமும் உட்கொண்டு வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும்.

எலுமிச்சை
எலுமிச்சை சாற்றை மிதமான சூடுடன் கூடிய நீரில் கலந்து, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும். எலுமிச்சையில் விட்டமின் சி மிகுதியாக உள்ளது. இருமல், சளி தொல்லை இருக்கும்போது உடலுக்கு விட்டமின் சி மிகவும் அத்தியாவசியம்.

Tags :
|
|
|