Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள்

By: Nagaraj Sun, 13 Dec 2020 10:04:30 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள்

இன்றைய காலக்கட்டத்தில் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை சாப்பிடுவது என்பதும் மிகவும் முக்கியமானதாகும். இது நம் உடலுக்கு சிறந்த தற்காப்பு.

அதனால் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பாதாமில் வைட்டமின் இ, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சிறந்த பலன்தரும்.

அதேபோல் இஞ்சி வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். உடலில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்.

immunity,food,defense,carrots,almonds ,நோய் எதிர்ப்பு சக்தி, உணவு, தற்காப்பு, கேரட், பாதாம்

தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.

அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில் மினரல்ஸ், வைட்டமின், இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

காய்கறிகளில் கேரட்டிற்கு தனி இடம்தான். கேரட்டை சமைத்து சாப்பிடுவதைவிட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின்ஏ, சத்து கண்பார்வைக்கு மிகவும் நல்லது.

Tags :
|