Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆரோக்கிய நன்மைகள் பெற தேனை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுங்கள்!

ஆரோக்கிய நன்மைகள் பெற தேனை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுங்கள்!

By: Monisha Fri, 06 Nov 2020 12:31:26 PM

ஆரோக்கிய நன்மைகள் பெற தேனை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுங்கள்!

தேன் ஓர் மருத்துவ குணம் நிறைந்த இனிய பொருளாகும். இந்த தேனை என்னென்ன பொருட்களில் சேர்த்து பயன்படுத்தினால் நமக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளவோம்.

* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும். மட்டுமல்லாது இதயம் பலம்பெறும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தியாகும், புது இரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழசாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்.

* ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்கும்.

* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல்புண் மற்றும் வாய்ப்புண்கள் மாறும்.

health,honey,fruit juice,ginger,orange ,ஆரோக்கியம்,தேன்,பழச்சாறு,இஞ்சி,ஆரஞ்சு

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இரத்த சோகை குணமாகும்.

* இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழசாறு கலந்து அதனுடன் தேனும் கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி, ஜலதோஷம் மற்றும் தலைவலி போன்றவை குணமாகும்.

* இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம் பழம் இவற்றுடன் தேனை விட்டு ஊற வைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்பது ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி உடல், மன சோர்வை போக்கும். குறிப்பாக பெண்கள் தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் இதை அருந்தினால் இரத்த சோகை குணமடையும். பருத்த உடல் இளைக்கும்.

Tags :
|
|
|