Advertisement

60 வயதாக போகிறதா? உங்கள் உணவில் கவனம் தேவை!

By: Monisha Wed, 16 Dec 2020 09:25:19 AM

60 வயதாக போகிறதா? உங்கள் உணவில் கவனம் தேவை!

சர்வதேச அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் இந்தியா உடல்பருமன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல்பருமன் என்பது அந்த ஒரு பிரச்னையோடு முடிந்து விடுவதில்லை. அது சர்க்கரைநோய், தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், ரத்தச்சோகை, பெண்களுக்கு கூடுதலாக மாதவிடாய்ப் பிரச்னைகள் என பல நோய்களை ஏற்படுத்துகிறது.

இதை தடுக்க டயட் எனப்படும் திட்ட உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது. நம்முடைய வயதுக்கு ஏற்ற உணவை சாப்பிட்டால் இதை தடுக்கலாம். இந்த பதிவில் 60 வயதை கடந்தவர்கள் எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி பார்போம்.

இந்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மாற்றங்கள் நிகழும். அதனால் உடல்சோர்வுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உணவில் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் சத்துகளை 60 வயதுக்கு மேல் உடல் முழுமையாக ஏற்காது. பசியின்மை, செரிமானமின்மை, உடல்சோர்வு ஏற்படுவதை உணர்வார்கள்.

obesity,diet,vitamin,protein,water ,உடல்பருமன்,திட்ட உணவு,வைட்டமின்,புரதம்,தண்ணீர்

ஆகவே அன்றாட உணவுப்பழக்கத்தில், வைட்டமின் ஏ, டி மற்றும் பி-12 அதிகம் இருக்கக்கூடிய முட்டை, மீன், பால் முதலியவற்றை சேர்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். கார வகை உணவுகள், எண்ணெய்ப் பலகாரங்கள், உப்பு அதிகம் இருக்கும் உணவுகள் முதலியவற்றை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.

காலை வேளையில் கஞ்சி வடிகட்டிய நீர் அல்லது எதாவது தண்ணீர் அருந்திவிட்டு 8:30 மணிக்குள் உணவு உட்கொள்ள வேண்டும். மதியத்துக்கு கஞ்சி வகை உணவும், அரிசி வகை உணவையும் சாப்பிடுவது நல்லது. மாலையில் புரதம் அதிகம் இருக்கும் தானிய வகைகளைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

தினமும் உடற்பயிற்சி செய்வது, மனதையும் உடலையும் காக்கும். இந்த வயதில் உள்ளவர்கள் அதிகம் தண்ணீர் அருந்தினால் நீர்ப்போக்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

Tags :
|