Advertisement

அருமையான மருத்துவக்குணங்கள் கொண்ட கொள்ளு!!!

By: Nagaraj Mon, 09 Nov 2020 8:50:48 PM

அருமையான மருத்துவக்குணங்கள் கொண்ட கொள்ளு!!!

கொள்ளில் உள்ள மருத்துவக்குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கொள்ளினை பொதுவாகப் பத்திய உணவாகவே எடுத்துக் கொள்வர், அதாவது கொள்ளில் ரசம், சாம்பார், சட்னி, கடையல் என எந்த ரெசிப்பி செய்தாலும் அது பத்திய உணவாகவே இருக்கும். பலரும் கொள்ளினை விரும்பிச் சாப்பிடுவதில்லை.

அதற்குக் காரணம் அது சுவை மிகுந்ததாக இல்லாததால்தான். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் தெரிந்தால் நிச்சயம் நீங்கள் கொள்ளினை எப்படியும் சாப்பிடுவீர்கள். கொள்ளினை சூப்பாக தினசரிக்குக் குடித்து வந்தால் நிச்சயம் உடல் எடையானது குறையும். மேலும் டயட் உணவாகச் சாப்பிட நினைப்போர் கொள்ளு சுண்டலை மதிய வேளைகளில் எடுத்துக் கொள்ளலாம்.

idli,dosa,kollu,rasam,body,calcium ,இட்லி, தோசை, கொள்ளு, ரசம், உடல், கால்சியம்

மேலும் இது வயிற்று வலி, பொருமல், பசியின்மை போன்ற செரிமானப் பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாகவும் உள்ளது. மேலும் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மாதவிடாய் தள்ளிப் போதல், வெள்ளைப் படுதல், கர்ப்பப் பை பிரச்சினைகள் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

மேலும் கொள்ளில் உள்ள கால்சியம் சத்தானது பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. மேலும் இதில் உள்ள புரதச் சத்தானது உடலைக் கட்டுக் கோப்பாக வைக்கவும் உதவுகின்றது.

கொள்ளு ரசத்தினை மதிய நேரங்களில் எடுத்துக் கொண்டால் முதியவர்கள் வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்புவர். மேலும் இரவு நேர உணவுகளான இட்லி, தோசைக்கு சட்னியாக வைத்து சாப்பிடவும் செய்யலாம்.

Tags :
|
|
|
|
|