Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • முந்திரிப் பருப்பில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!!

முந்திரிப் பருப்பில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!!

By: Monisha Thu, 06 Aug 2020 4:55:26 PM

முந்திரிப் பருப்பில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!!

முந்திரிப் பருப்பில் விட்டமின் ஏ, சி, இ, கே, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), பி9 (ஃபோலேட்டுகள்) ஆகியவை உள்ளன. இப்பருப்பில் மிகஅதிகமாக உள்ள காப்பர் சத்தானது இரும்புச்சத்தின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுவதோடு இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.

மேலும் காப்பர் சத்து எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலை சீராக்கவும் உதவுகிறது. இச்சத்தானது உடலின் உள்ள நரம்புகள் மற்றும் எலும்புகளின் அமைப்பிற்கு இன்றியமையாதது. முந்திரிப் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்வது பித்தப்பையில் கற்களின் உருவாக்கத்தைக் குறைக்கிறது.

cashews,vitamins,copper,health,digestion ,முந்திரிப் பருப்பு,விட்டமின்,காப்பர் சத்து,ஆரோக்கியம்,செரிமானம்

தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம். மேலும் மலச்சிக்கல் தீரவும், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீரவும் முந்திரி பருப்புகளை அடிக்கடி சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் தீரும்.

நாற்பது வயதுகளை தொடும் போதே அனைவருக்கும் தலைமுடி நரைக்கிறது. முந்திரி பருப்பில் காப்பர் எனும் செம்பு தாதுப்பொருள் உள்ளது. இது முடியின் கருமை நிறத்தைப் பாதுகாத்து. முடி விரைவில் நரைக்காமல் தடுக்கிறது.

Tags :
|
|