Advertisement

உடல் எடையை குறைக்க உதவும் சில இயற்கை குறிப்புகள்!

By: Monisha Mon, 06 July 2020 3:47:56 PM

உடல் எடையை குறைக்க உதவும் சில இயற்கை குறிப்புகள்!

இன்றய காலகட்டத்தில் உடல் பருமன் அனைவரும் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று. இந்த பதிவில் உடல் எடையை குறைக்க உதவும் சில இயற்கை குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால், ஜின்ஜிபெரின் மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நலம்.

obesity,body weight,ginger,honey,health ,உடல் பருமன்,உடல் எடை,இஞ்சி,தேன்,ஆரோக்கியம்

குறிப்பாக தொப்பையிருப்பவர்கள் தட்டை வயிறை பெற முட்டை கோஸை அதிகமாக எடுத்துகொள்ளலாம். குறைந்த கலோரி கொண்ட முட்டைகோஸ் உடல் எடை குறைப்பதில் கணிசமாக உதவுகிறது

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும். எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

சாப்பிட்டு முடித்ததும் கொதிக்க வைத்த நீரில் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து குடித்துவந்தால் உடல் எடை குறையும். காலை அல்லது இரவு நேரங்களிலும் இந்த நீரை குடிக்கலாம்.
நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும். தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

Tags :
|
|