Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது?

உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது?

By: Monisha Sun, 28 June 2020 3:55:32 PM

உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது?

நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைப்பது ரத்தம்தான். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது தான் ரொம்ப முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

செம்பருத்திப் பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் செம்பருத்தி பூவின் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடலின் சோர்வை குறைந்து ரத்தத்தை தூய்மை அடையச் செய்யும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.

health,body organs,blood,hibiscus flower,beetroot ,ஆரோக்கியம்,உடல் உறுப்புகள்,ரத்தம்,செம்பருத்திப் பூ,பீட்ரூட்

அதேப்போன்று, தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழ சாற்றில் கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. எனவே இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்தம் விருத்தியாகும்.

Tags :
|
|