Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உணவு பொருட்கள் மூலம் இயற்கையான முறையில் ரத்தத்தை சுத்திகரிப்பது எப்படி ?

உணவு பொருட்கள் மூலம் இயற்கையான முறையில் ரத்தத்தை சுத்திகரிப்பது எப்படி ?

By: Karunakaran Fri, 02 Oct 2020 3:40:52 PM

உணவு பொருட்கள் மூலம் இயற்கையான முறையில் ரத்தத்தை சுத்திகரிப்பது எப்படி ?

இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக முகப்பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் தோன்றலாம். மேலும் தூய்மையற்ற ரத்தம் ஒவ்வாமை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை தடையின்றியும், சீராகவும் கொண்டு செல்வதற்கு இரத்த சுத்திகரிப்பு முக்கியமானது. சில வகை உணவு பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் ரத்தத்தை சுத்திகரிக்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். ஆரோக்கியமும் மேம்படும். ரத்தத்தை சுத்திகரிக்க எலுமிச்சை சாறு சிறந்தது. அதில் இருக்கும் அமிலத்தன்மை உடலின் பி.எச் அளவை சமநிலைப்படுத்தும். ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடா, 3 டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகர் கலந்து பருகலாம். இந்த கலவை பி.எச். சீராக்க உதவும். நச்சுத்தன்மை கொண்ட ரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை நீக்கி சுத்தப்படுத்தவும் உதவும்.

purify,blood naturally,food,oxygen ,சுத்திகரிப்பு, இயற்கை இரத்தம், உணவு, ஆக்ஸிஜன்

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்வதற்கு பீட்ரூட் பரிந்துரைக்கப்படுகிறது. அதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் ரத்தத்தை சுத்திகரிக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். வெல்லம் இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் இரும்பு சத்து உடலில் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு வழிவகை செய்யும். ரத்தக்கட்டிகளையும் நீக்க உதவும். இதுதவிர ஹீமோகுளோபின் அளவை மீட்டெடுப்பதற்கும் வெல்லம் உதவும்.

துளசி அனைத்து நச்சுக்களையும் சிறுநீர் மூலம் வெளியேறவும் வைத்துவிடும். தினமும் ஏழு, எட்டு துளசி இலைகளை சாப்பிடலாம். ஒரு கப் துளசி தேநீரும் பருகலாம். சிறந்த கிருமி நாசினியாக விளங்கும் மஞ்சள் ரத்தத்தில் உள்ள நச்சுக்கூறுகளை சுத்தம் செய்வதற்கும் உதவும். பாலுடன் மஞ்சள் கலந்து பருகலாம். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ரத்தம் நச்சுத்தன்மையற்றதாக இருக்க வேண்டும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவது போலவே உடலுக்குள் இருக்கும் ரத்தத்தை சுத்திகரிப்பதும் முக்கியமானது.

Tags :
|
|