Advertisement

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்

By: Karunakaran Fri, 18 Dec 2020 5:32:04 PM

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்

நாப்கின்களில் பல பிராண்டுகள் இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. தங்களுக்கு பொருத்தமான நாப்கின்களை தேர்வு செய்வதற்கும் ஆர்வம் காட்டுவதில்லை. நாப்கின்களை சீரான இடைவெளியில் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதனை அசவுகரியமாக கருதி நீண்ட நேரம் பயன்படுத்தவும் செய்கிறார்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும் என்பது சுகாதார நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது. காட்டன் நாப்கினைகளை உபயோகித்தால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

மற்ற நாப்கின்களை விட காட்டன் நாப்கின்கள் சிறந்தது என்பது படித்த பெண்களுக்கு தெரிந்திருந்தாலும் அதனை உபயோகிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. மாதவிடாய் காலத்தில் பழங்கள், காய்கறிகளை வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுங்கள். உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம். அதனால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். டார்க் சாக்லேட்டையும் சாப்பிடலாம். மாதவிடாய் காலத்தில் பேரீச்சம் பழத்தையும் தவறாமல் சாப்பிட வேண்டும். மாதவிடாய் காலத்தில் உடல் சுத்தத்தை பராமரிப்பதும் முக்கியம்.

mistakes,women,menstruation,napkins ,தவறுகள், பெண்கள், மாதவிடாய், நாப்கின்கள்

நாப்கின்களை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். 4 மணி நேரத்திற்குள் மாற்றுவது நல்லது. மாதவிடாய் கப்கள் உபயோகித்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். மாதவிடாயின்போது தினமும் இருமுறை குளிப்பதும் நல்லது. அது வலியை குறைக்கும். மன நிலையையும் மேம்படுத்த வழிவகை செய்யும். குறைந்தபட்சம் நடைப்பயிற்சி மேற்கொள்வது வலியை குறைக்கும். மனதிற்கும் இதமளிக்கும்.

இரவில் தூங்க செல்லும்போது நாப்கின்களை அப்புறப்படுத்தக்கூடாது. துரித உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அவைகளை தவிர்ப்பது உடலில் திரவத்தின் இருப்பை அதிகரிக்க செய்யும். காபின் கலந்த பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதனை அதிகம் பருகுவது வலியை அதிகரிக்க செய்துவிடும். நாப்கின்களை உபயோகித்த பிறகு அதனை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் வலி அதிகரிக்கும். வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Tags :
|