Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து

உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து

By: Nagaraj Fri, 27 Nov 2020 9:21:57 PM

உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து

இப்போது மக்கள் இயற்கை மருந்துகளை நாட தொடங்கி விட்டார்கள். அதன் பெருமையை உணர்ந்து கொண்டு விட்டார்கள். உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து குறித்த விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது.

உடல் ஆரோக்கியம் குன்றிய பிறகு மருத்துவரை அணுகினால் தான் நோய் தீரும். ஆனால் ஆரம்ப கட்டங்களில் உடலில் குறைபாடு உண்டாகும் போது கை வைத்தியம் மூலமே அதை முழுமையாக சரி செய்துவிடமுடியும்.

மலரில் மென்மையான ரோஜா உடல் ஆரோக்கிய குறைபாட்டை நிவர்த்தி செய்யவும் உதவும். ரோஜா குல்கந்து எப்போதும் வீட்டில் வைத்திருந்தாலே போதும். பலவிதமான குறைபாட்டை தீர்த்துவிட முடியும். ரோஜா குல்கந்துவை எப்படி செய்யலாம் என்பது பார்க்கலாம்.

ரோஜா குல்கந்து என்பது ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த மருந்து. இது துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.

தேவையானவை

ரோஜா பூ - 30 பூக்கள் ( நாட்டு பூ பன்னீர் பூவாக இருக்க வேண்டும்)
பெரிய கற்கண்டு - 100 கிராம்
தேன் - 100 கிராம்
குங்குமப்பூ - 5 கிராம்
வெள்ளரி விதை-10 கிராம்
கசகசா -10 கிராம்

 ,ரோஜா குல்கத்து, கசகசா, தேன், குங்குமப்பூ, வெள்ளரி விதை


செய்முறை:
ரோஜா பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து நீரில் அலசி எடுக்கவும். நீர் உலரும் வரை வைத்திருந்து கற்கண்டையும், ரோஜா இதழ்களையும் உரலில் இட்டு இடிக்கவும். சிலர் மிக்ஸியில் இட்டு மைய அரைப்பார்கள். ஆனால் உரலில் இட்டு இடிப்பதுதான் நல்லது. இவை நன்றாக கலந்ததும் எஞ்சியிருக்கும் பொருள்களான வெள்ளரிவிதை கசகசா சேர்த்து ஒரு இடி இடித்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் வழித்து எடுக்கவும்.

முதலில் சிறிது தேன் பிறகு இடித்த விழுது சேர்த்து பிறகு குங்குமப்பூ சேர்க்கவும். இதே போன்று தேன், இடித்த விழுது, குங்குமப்பூ மாறி மாறி சேர்த்து நன்றாக கலந்தால் எல்லா பொருள்களும் நன்றாக கலந்துவிடும். இதன் வாயிலில் துணி கட்டி அப்படியே வெயிலில் வைத்து நன்றாக கிளறி விடவும். தொடர்ந்து 5 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்கலாம். ரோஜா குல்கந்து தயார்.

Tags :