Advertisement

பற்களில் படிந்துள்ள கறையை போக்க எளிய வழிகள்

By: Nagaraj Mon, 10 Aug 2020 2:09:36 PM

பற்களில் படிந்துள்ள கறையை போக்க எளிய வழிகள்

பற்களில் படிந்துள்ள கறையை போக்க எளிய வழிகள் உங்களுக்காக.

பொதுவாக சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் தயங்குவார்கள். இப்படி பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்க சில எளிய வழிகள்:

தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும்.

stains on teeth,salt,orange peel,olive oil ,பற்களில் கறை, உப்பு, ஆரஞ்சு தோல், ஆலிவ் ஆயில்

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

பற்களை சுத்தமாக்குவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் அளிப்பதிலும் ஆப்பிளின் பங்கு சிறந்தது. எனவே உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிளை சில துண்டுகள் சாப்பிட்டு வர, பற்களில் கறை படிவதைத் தடுக்கலாம்.

கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.

1 தேக்கரண்டி கிராம்புத் தூளுடன், 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்து, சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதன் மூலம் சுத்தமான பற்களைப் பெறலாம்.

Tags :
|