Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் பருமன், மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஸ்கிப்பிங் பயிற்சி

உடல் பருமன், மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஸ்கிப்பிங் பயிற்சி

By: Nagaraj Wed, 12 Aug 2020 6:53:17 PM

உடல் பருமன், மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஸ்கிப்பிங் பயிற்சி

உடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு ஸ்கிப்பிங் அல்லது கயிறு தாண்டும் பயிற்சி. இந்தப் பயிற்சியில் பல வகை உள்ளன. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை நீங்க உதவும்.

ஸ்கிப்பிங் பயிற்சி இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும். தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும்.

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும். கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இது ஒரு முழு உடலுக்கான பயிற்சி.

skipping training,stress,obesity,spinal cord ,ஸ்கிப்பிங் பயிற்சி, மன அழுத்தம், உடல் பருமன், தண்டுவடம்

ஸ்கிப்பிங் எந்த அளவுக்கு உடலுக்கு முக்கியமோ அதே அளவு ஸ்கிப்பிங் கயிற்றின் நீளம் மிக முக்கியம். கயிற்றை நம்முடைய உயரத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். கயிற்றில் சரியான நீளத்தை தேர்வுசெய்ய, கயிற்றின் மத்தியில் கால்களை வைத்து உயர்த்திப்பிடிக்க வேண்டும். அது உங்களின் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருந்தால் அது சரியான அளவு.

ஸ்கிப்பிங் கயிற்றின் முனையில் அதிக கயிறு கையைவிட்டு வெளியே வராத அளவு நடுவில் பிடிக்க வேண்டும். ஸ்கிப்பிங் கயிற்றை கைகளில் பிடிக்கும்போது கயிற்றின் நுனியிலும் கையின் நுனியிலும் பிடிக்கக் கூடாது. அதேபோன்று அதிக கயிறு கைகளை விட்டு வெளியில் வரும்படியும் பிடிக்கக் கூடாது. நல்ல தரமான கயிறைப் பயன்படுத்தவும்.

ஸ்கிப்பிங் யார் செய்யக் கூடாது என்றால் அதிக உயரம் கொண்டவர்கள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. இதய நோயாளிகள், கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, எலும்பு முறிவு உடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் அனைவரும் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|