Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கிய கற்பூரவள்ளியின் பயன்கள்

ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கிய கற்பூரவள்ளியின் பயன்கள்

By: Nagaraj Sun, 25 Oct 2020 9:48:20 PM

ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கிய கற்பூரவள்ளியின் பயன்கள்

ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கிய கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமடையும்.

சைனஸ், தலைபாரம் நீங்க கற்பூரவள்ளிச் சாற்றுடன் 200 மி. சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இறக்கித் தலையில் தேய்த்து வந்தால் சைனஸ், தலைபாரம், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும். கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

camphor,cough,phlegm,honey,lemon juice ,கற்பூரவள்ளி, இருமல், சளி, தேன், எலுமிச்சை சாறு

தேவையான பொருட்கள்:

கற்பூரவள்ளி இலைகள் - 5
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
டீத்தூள் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
தேன் - தேவைக்கு
தண்ணீர் - 2 கப்

செய்முறை: முதலில், கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும்.

பின் வடிகட்டி, தேவையான அளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து பருக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் நீங்கிவிடும்.

Tags :
|
|
|